Author Topic: ~ ஹார்ட் அட்டாக் வராமல் இதய தமனிகளை திறக்க… ~  (Read 427 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226864
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹார்ட் அட்டாக் வராமல் இதய தமனிகளை திறக்க…

ஹார்ட் அட்டாக் வராமல் தடுத்து, அடைந்த இதய தமனிகளை திறக்க ஒரு எளிய வீட்டு மருந்து. இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் இந்த சுலப மருந்துக்கு தேவையானவை:
1- 15 எலுமிச்சை பழங்கள்
2- 12 முழு பூண்டு
3- 1kg இயற்கையான தேன்
4- 400gr வால்நட்/அக்ரூட்
5- 400gr முளைத்த கோதுமை (மருந்தடிக்கப்படாத (ஆர்கானிக்) கோதுமை )
எவ்வாறு செய்வது ?
1- கோதுமையை நன்றாக கழுவி ஒரு கண்ணாடி ஜாடியில் இட்டு சுடு தண்ணீரை ஊற்றவும். பிறகு ஒரு சல்லடை துணியால் மூடி 12 மணி நேரம் வைக்கவும்.
2- அதற்கு பிறகு, கோதுமையை கழுவி தண்ணீரை வடிக்கவும். ஒரு நாள் கழித்து கோதுமை 1-2mm நீளத்தில் முளைத்திருக்கும்.
3- பூண்டை தோலுரித்து கொள்ளவும். ஒரு பொடி செய்யும் மிக்ஸியில் (mincing machine) சுத்தம் செய்த பூண்டு, வால்நட், முளைத்த கோதுமை எல்லாம் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இடவும்.
4- 5 எலுமிச்சை பழங்களை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி, துடைத்து அரைத்து கண்ணாடி பாட்டிலில் இடவும்.
5- மீதியுள்ள 10 எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும்.
6- மேலே சேர்த்த பொருட்களுடன் தேனையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவை உள்ள கண்ணாடி பாட்டிலை மூடியிட்டு பிரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு இதை எடுத்து உபயோகப்படுத்தலாம்.
எவ்வாறு சாப்பிடுவது ?
சாப்பிடுவதற்க்கு 1அரை மணி நேரம் முன்பு 1-2 டேபிள்ஸ்பூன் சாப்பிடவும்.
இதனால் என்ன நன்மைகள் ?
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது
இரத்த நாளங்களை சுத்தம் செய்கிறது
ஹார்ட் அட்டாக்கிலிருந்து பாதுகாப்பு தருகின்றது
இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது
லிவரை சுத்தம் செய்கின்றது
மூளையின் ஆற்றலை மேம்படுத்துகின்றது.