Author Topic: ~ கர்ப்பமடைய உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை ~  (Read 357 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226881
  • Total likes: 29029
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கர்ப்பமடைய உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை

பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான். அது தான் அவர்களுக்கு எல்லற்ற மகிழ்ச்சியும் கூட. இதற்காக உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் செலுத்தி தங்களது எடையை கச்சிதமாக வைத்திருப்பர்.

ஆனால் கர்ப்பமடைய அதுமட்டும் போதாது. நாம் கர்ப்பமடைய சில சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதும் அவசியமாகும்.

அதிலும் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம்.

முட்டைகோஸ்
முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். எனவே இதை சாப்பிடுவதால் நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

ப்ராக்கோலி
கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைகள் மற்றும் கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் ப்ராக்கோலியில் உள்ளது.

அவித்த உருளைக்கிழங்கு
அவித்த உருளைக்கிழங்கில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

முட்டை
முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கருவறும் தன்மை மேம்படும்.

மாதுளை
மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

மஞ்சள்
சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி இதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.