Author Topic: ~ இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை ) ~  (Read 636 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226882
  • Total likes: 29029
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இன்சோம்னியா – Insomnia ( தூக்கமின்மை )

வழமைக்கு மாறான உறக்கமின்மையையே இன்சோம்னியா எனப்படும். பெரும்பாலான நாட்களில் இரவு முழுவதும் நித்திரை கொள்ள முடியாதிருப்பதைக்குறிக்கும். இந்நிலை ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்குமாயின் நீண்ட கால நித்திரையின்மை (chronic insomnia) எனக் கருதப்படும். உறங்கப்போகும் போது அல்லது நித்திரை முறிந்து மீண்டும் உறங்கப்போகும் போது உங்களால் நித்திரை கொள்ள முடியாதிருக்கும். இன்சோம்னியா இருக்கும் போது மிகவும் வெறுப்பாக இருக்கும் எவ்வாறாயினும் இதனால் அபாயங்கள் அரிதாக இருப்பதோடு இவை தற்காலிகமானதாகவும் உள்ளது. சிலருக்கு இப் பிரச்சனை மாதங்களாகவும், சிலருக்கு இவை வருட காலமாகவும் காணப்படுகிறது.

chronic insomnia ( நீண்ட கால தூக்கமின்மை ) என்பது சில மருத்துவக் கோளாறுகள் காரணமாக அடிப்படையின் அறிகுறிகளையும் பிரதி பலிக்கும். இன்சோம்னியா இருப்பவர்களில் 50% மானவர்கள் மன உலைச்சலுக்குள்ளானவர்களாகவோ அல்லது உலல்ரீதியான கோளறுகளுக்குள்ளானவர்களாகவோ காணப்படுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றனர் ( உதாரணமாக- வருத்தம்/கவலையுடையோர், மன அழுத்தமுடையோர், பதட்ட நிலையுடையோர்). இன்சோம்னியா ஏற்படுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

   வலியுடைய மூட்டு வீக்கம்
    ஆஸ்துமா
    சுவாச பிரச்சனைகள்
    இரத்த சக்கரை குறைவு
    அதிகமான தைரைட்டு சுரப்பியின் செயலாக்கம்
    அஜீரணம்
    இதயம்/சிறுநீரக வருத்தங்கள்
    தசையின் வலிகள்
    பார்கின்சன் நோய்கள்
    உடல் வலி

அது போன்று பின்வருவனவும் காரணமாகின்றன.

   கபின் பயன்பாடு
    கால் உழைதல் (Jet Lag)
    குறிப்பிட்ட சில மருந்துகளின் பயன்பாடு (தூள் மருந்துகள்)
    மானவழுத்தங்களுக்கான எதிர்ப்புக்கள்
    டிலாண்டின்
    மிகவும் பசி அடக்கு மருந்துகள்
    உயர்குருதியழுத்தத்துக்கோ அல்லது இதய வியாதிகளுக்கோ பாவிக்கப்படும் மருந்துகள்
    நோய்க்கான சில தீர்வுகள் (Remedies)
    தைரைட்டு ஹார்மோன் மாற்று மருந்துகள்

ஆகியவற்றை குறிக்கலாம்.

கால்சியம், மக்னீஷியம் குறைபாடுகள் காரணமாக சிறிது மணித்தியாலங்களின் பின் நித்திரை முறிதல், பின் மீண்டும் நித்திரையின்மை போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. மூளை, ஜீரண அமைப்பு, எண்டோகிரைன் அமைப்பு, இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல்கள், கணையம் போன்றவற்றினால் ஏற்படும் கோளாறுகளின் பங்களிப்பு காரணமாகவும் நித்திரை பாதிப்படைகிறது. அதுபோன்று குறை ஊட்டச்சத்து பழக்க வழக்கங்கள், நித்திரை கொள்ளுவதற்கு சற்று முன்னதாக உண்ணுதல் போன்றனவும் காரணமாகின்றது. உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை முறையும் நித்திரை சீர்கேடுகளுக்கு மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒன்று/இரண்டு நாட்கள் வரை இரவில் நித்திரை கொள்ளாது இருந்தால் அவை எளிதில் சீற்றம் கொள்கிற பண்பையும், சில வேளைகளில் பகல் நேரங்களில் நித்திரைகலக்கமாகவும் இருக்கும். இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக அவர்களது பணிகளுக்கான செயற்திறன் குறைவடையவும் வாய்ப்புண்டு. பெரும்பாலானோருக்கு தூக்கமின்மை பிரச்சனைகள் குறுகிய காலத்துக்கே ஏற்படுகின்றது. எவ்வாறாயினும் மூன்று நாட்களை விட நீடிக்கும் தூக்கமின்மை மொத்த செயற்பாடுகளையும் சீர்கெடுக்கும் ஆபத்துகளை கொண்டுள்ளதோடு தோற்றங்களில் சில மாற்றத்தையும் ஏற்படுதக்கூடும். இந் நிலை நீடிக்குமாயின் இவை உறவுகளுக்கிடையில் பிரிவை ஏற்படுத்துவதோடு வேறு உடற் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

எவ்வளவு நேர நித்திரை போதுமானது என்பதை உறுதிபடுத்தும் எந்த விதி முறைகளும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமான தேவைகள் ஆளுக்காள் வேறுபடலாம். சிலர் இரவில் 5 மணித்தியால நித்திரையின் பின் தாம் புத்துணர்ச்சி பெற்றதாக உணர்வார்கள். வேறு சிலர் 9 மணித்தியாம் அல்லது 10 மணித்தியாம் அல்லது அதற்கு மேல் நித்திரை கொண்ட பின்னே தாம் புத்துணர்ச்சி பெற்றதாக உணர்வார்கள். பொதுவாக பெரியவர்கள் நாளொன்றில் புத்துணர்ச்சி பெறுவதற்கும், உச்ச திறனை பெறுவதற்கும் 8 மணித்தியால நித்திரை அவசியம். சிறுவர்கள், முக்கியமாக இளம் வயது சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் அவர்களது உச்ச திறனை பெருவதற்கு பெரியவர்களை விட அதிகளவு நேரம் நித்திரை கொள்வது அவசியம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறிதளவு உறக்கம் போதுமானதாகவிருப்பது பொதுவான ஒன்றாகும்.

அறியப்பட்ட வரை பல மில்லியன் மக்கள் RLS (restless leg syndrome) -தினாலேயே நித்திரையில்லாது அவதிப்படுகின்றனர். சில சமயம் காரணங்கள் அறியப்படாத போதிலும் அவர்கள் படுக்கையில் உள்ள போது அவர்களது கால்கள் திடீரென வெட்டி இழுத்தல், திடீரென தசை இழுத்தல், தானாகவே உதைத்தல் போன்றனவும் காரணமாகின்றது. ஒய்வற்ற கால்களினால் இரவு வேளைகளில் வலியும், தசைப்பிடிப்பும் இதற்கு மற்றுமொரு காரணமாகின்றன. RLS க்கு மெக்னீசியம் குறைபாடு ஒரு காரணமாக அமையலாம். இன்சோம்னியா சலிப்பு தன்மையை (எரிச்சல்) ஏற்படுத்துவதில் பெருமளவில் பங்களிக்கின்றது என ஆய்வுகள் பலவும் கூறுகின்றன.

Sleep Apnea (தூங்கும் வேளைகளில் சுவாசம் தடைப்படுதல்) என்பது ஒரு ஆபத்தான நித்திரை கோளாறாகும். இது பொதுவாக இரவு வேளைகளில் துங்கும் போது குறட்டைவிடுதல், மிகவும் ஒழுங்கற்ற சுவாசம் ஆகிய சந்தர்ப்பத்திலேயே நிகழக்கூடும். Sleep Apnea கூடியது 2 நிமிடங்கள் ஏற்படலாம் (அதாவது நித்திரை குழையும் வரை). சுவாசம் தடைப்படும் போது இரத்தத்தில் ஒட்சிசன் அளவு குறைகிறது. இதன் காரணமாக பிராணவாயு இழப்பு ஏற்படுகிறது. Sleep Apnea உள்ளவர்களுக்கு நித்திரை வேளைகளில் ஏறத்தாள 200 தடவைகள் எழும்புகிறார்கள். மூச்சு திணறல் ஏற்ப்படும் தருணத்தில் அவர்கள் இயற்கையாகவே எச்சரிக்கை அடைகிறார்கள். மத்திய தூக்கத்தில் மூச்சுத்திணறல், சுவாசம் நிற்றல், காற்று வரும் பாதைகள் அடைக்கப்படுவதன் மூலம் ஏற்படும் திணறல்கள் என்பன ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் அவ்வாறு நிகழும் வேளைகளில் உதரவிதானம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றன ஏற்படும்.

சாதாரண நித்திரை குழப்பம் நாள் பொழுதில் தீவிரமான தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். Sleep Apnea உடன் இருப்பவர்களுக்கு உயர் குருதி அழுத்தம், ஸ்ரோக்ஸ் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் மற்றையவர்களை விட அதிகமாகக் காணப்படுகின்றது. அது போன்று இதய கோளாறுகள், உடல்-உள கோளாறுகள் போன்ற ஆபத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

Offline gab

நல்ல பதிவு .

நான் படுத்த 1 நிமிடத்தில் தூங்கி விடுகிறேன். கடவுளுக்கு நன்றி.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226882
  • Total likes: 29029
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Nandrigal Gab  :) :) unga response ku..