உடல் எடை குறைய முட்டை சாட் மசாலா
புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும்.
இந்த முட்டையை பல விதமாக செய்து சாப்பிடலாம்.
இதோ முட்டை சாட் மசாலா
தேவையான பொருட்கள்
முட்டை – 3
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாட் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
ஓமம் – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
• முட்டையை அவித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
• முட்டையில் மேல் தக்காளி சாஸ் கலவையை ஊற்றி அதன் மேல் சாட் மசாலாவை தூவவும்.
• பின்னர் அதன் மேல் ஓமத்தை கைகளால் நன்றாக கசக்கி அதன் மேல் தூவவும்.
• கடைசியாக கொத்தமல்லி தூவி பறிமாறவும்.