கரம் மசாலாவில் செய்த உணவில் மணமும் ருசியும் தனியா தெரியும்... இந்த கரம் மசாலவை நாம் வீட்லயே அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. பங்கு என்று குறிப்பிட்ட அளவு கப் அல்லது டம்ளர் அல்லது ஆழாக்கால் தேவைக்கேற்ற அளவில் அரைத்துக் கொள்ளலாம். ஜிப் லாக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால் வாசனை கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பட்டை - அரை பங்கு
லவங்கம் - அரை பங்கு
ஜாதிக்காய் - எண்ணிக்கையில் 4
ஏலக்காய் - 4 பங்கு
சீரகம் - ஒரு பங்கு
சோம்பு - 10 கிராம்
பிரிஞ்சி இலை - 5-6
மல்லி - அரை பங்கு
மிளகு - அரை பங்கு
கிராம்பு - அரை பங்கு
கல் உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:
* இவை எல்லாவற்றையுமே தனித் தனியாக வெயிலில் உலர்த்திக் கொண்டு, மிக்சியிலேயே தனித் தனியாக பொடிக்கவும். நல்ல நைசாக பொடித்து வைக்கவும்.
* சிலர் இதிலேயே சுக்கு / இஞ்சியும் சேர்க்கிறார்கள். தேவையில்லை.. சமைக்கும் போது அரைத்து விட்ட இஞ்சியை சேர்த்துக் கொண்டால் போதும்.. இந்த கரம் மசாலா பொடியில் சேர்க்க தேவையில்லை.