Author Topic: ~ மலேரியாவை முற்றிலுமாக குணப்படுத்தும் புதிய மருந்து! ~  (Read 382 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227480
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மலேரியாவை முற்றிலுமாக குணப்படுத்தும் புதிய மருந்து!

மலேரியாவை முற்றிலுமாக இரண்டே நாட்களில் குணப்படுத்தும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மலேரியாவை படிப்படியாக குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமே உள்ளன. தற்போது நவீன நுட்பத்தால் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துக்கு எஸ்.ஜே.733 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்து 2 நாளில் மலேரியா நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப்புதிய மருந்து மலேரியா தாக்கியுள்ள ரத்த சிவப்பு அணுக்களை மட்டும் அழிக்கும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் சுகாதாரமான மற்ற செல்கள் அழியாமல் பாதுகாக்கும். இந்த மருந்தை மலேரியா நோய் தாக்கிய எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் 80 சதவீத மலேரியா கிருமிகள் அழிந்து விட்டன. 48 மணி நேரத்தில் கிருமிகள் முற்றிலும் அழிந்தது. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.