எலும்புகளை வலுவாக்கும் ஜூஸ்
தற்பொழுது பாலைப்பற்றியும், எலும்புகளின் வலுவைப்பற்றியும் மிகவும் தவறான செய்திகள் வந்து கொண்டுள்ளன. உண்மையில் மிகவும் சிறந்த முழுமையான கால்சியம் இயற்கையான தாவரங்களில் கிடைப்பதுதான். இவை உடலில் விரைவாக கிரகித்து ஜீரணமாகின்றது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்த முறையில் ஒரு எளிமையான சக்தி வாய்ந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவை:
5 நடுத்தரமான ஆர்கானிக் ஆப்பிள்
2 ஆர்கானிக் செலரி தண்டுகள்
2 ஆர்கானிக் ஆரஞ்சு பழத்தின் சுளைகள்
இவற்றை மிக்ஸயில் அடித்து அல்லது மெதுவாக பிழியும் ஜூஸரில் பிழிந்து நன்றாக கலக்கி அருந்தவும். ஜூஸாக்கியவுடன் எவ்வளவு விரைவில் அருந்துகிறோமோ அவ்வளவு விரைவில் நல்ல சத்துகள் உடலில் கிரகிக்ப்படும்.
பிரெஞ்சு அறிஞர்கள் ஆப்பிளில் உள்ள புளோரிட்சன் எனப்படும் பிளோவனாயிட்டுகள் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகளின் வலுவை குறைக்கும் நோய்க்கு தீர்வாக கண்டுபிடித்துள்ளனர். ஆப்பிளில் காணப்படும் போரான் எனப்படும் மற்றொரு சத்தும் எலும்புகளை வலுவாக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்