Author Topic: நிறைகுடம்  (Read 598 times)

Offline thamilan

நிறைகுடம்
« on: December 09, 2014, 08:22:38 PM »
அகன்ற உலகு நான் என்றது
அகல்
அழகிய உடல் நான் என்றது
திரி
அசையும் உயிர் நான்  என்றது
சுடர்
உழைத்து வடிந்த உதிரத் துளிகளாய்
தேங்கி நின்ற
எண்ணெய்
வாய் திறக்கவில்லை

குறைகுடங்கள் தான்
தளும்பும்
நிறைகுடங்கள் என்றும்
தழும்புவதில்லை

Offline Maran

Re: நிறைகுடம்
« Reply #1 on: December 10, 2014, 01:45:23 PM »


அழகான

அற்புதமான

ஆழமான


படைப்பு தோழரே...



சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

அருமை அருமை...முடித்த விதம் அருமை.



தேவை விளம்பரம்
பூக்கடைக்கும்
காகிதப்பூக்கள் !