எட்டித் தள்ளினாலும்
முட்டி மோதிக் கொண்டு
முன்வரிசையில் வந்த்தமர்ந்து கொள்கிறது
மனித கோபம்
கோபம் களைய
முதல் மருந்து பொறுமை
அடுத்து? ......
மற்றவர் மனமறியும்
நிலையறியும் ஞானம்
அது தரும்
விவேகமான மௌனமும்
புன்னகையும்
உனக்கு நீ செய்யும்
பேருதவி
யாரிடமும் கோபப்படாமல் இருப்பதே
கோபம் உன்னை
தனித்தீவாய் மாற்றிவிடும்
மறந்துவிடாதே
கோபமில்லா மனமொரு
அழகிய பூந்த்தோட்டம் அதில்
ஒவ்வொரு வார்த்தையும்
அழகில் குளித்தெழுந்த
பாசமிகு மல்லிகைப் பூக்கள்