Author Topic: ~ இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்! ~  (Read 669 times)

Offline MysteRy

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!



இந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகளில் அனைத்திலும்  நடைமுறையில் உள்ளது.

இந்த NPS (National Pension System) திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். முதலில் ரூ.600 செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் ரூ.100 செலுத்த வேண்டும். இந்திய அரசு உங்கள் கணக்கில் வருடம்தோறும் ரூ.1000 செலுத்தும் (முதல் நான்கு ஆண்டுகள் வரை).

உங்களுக்கு 60 வயது ஆகும் பொழுது உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். இதற்கு 8 முதல் 12% வரையிலான கூட்டுவட்டியும் உண்டு.

அதுமட்டுமல்லாமல், NRI-க்கள் மற்றும் PPF சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். PRAN-Permanent Retirement Account Number உள்ளவர்கள், கீழ்நிலை / ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஓய்வூதியம் பெற இந்தத்  திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.



மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இதில் முகவர்களாக சேர்ந்தும் வருமானம் ஈட்டலாம்.

மேலும் விவரங்களை http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்