Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 395 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~
« on: December 02, 2014, 08:42:41 PM »
டிப்ஸ்... டிப்ஸ்...!

இனிப்புகள் தயாரிக்கும்போது பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்களை சீரான அளவில் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டுமா? அவற்றை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். ஒரு டம்ளரில் சூடான நீரை வைத்துக்கொண்டு, கத்தியை வெந்நீரில் தோய்த்து, காய்களை வெட்டுவது போல் சாதாரணமாக நறுக்கினால், உலர்பழங்களை ஒரே அளவில் துண்டுகள் போட முடியும் (கவனம்... கத்தியால் அழுத்தி வெட்டினால் துண்டுகள் சிதறிவிடும்)



குழந்தைகளின் காதுக்கருகில் செல்போனை வைத்தபடி பேச்சு, பாட்டு முதலியவற்றைக் கேட்கச் செய்வதைத் தவிர்க்கவும். திடீரென்று பெரும் ஓசை காதில் விழுந்தால் குழந்தைக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதோடு அலைக்கதிர்களாலும் அபாயம் ஏற்படலாம்.

தினமும் நெய்யை அடுப்பில் வைத்து உருக்கினால், மணமும், ருசியும், நிறமும் மாறிவிடும். நெய்யை உருக்க நினைக்கும்போது, ஒரு எவர்சில்வர் ஸ்பூனை 10, 15 விநாடிகள் தீயில் காட்டி சூடு பண்ணி, நெய் பாத்திரத்தின் ஒரு மூலையில் செருகுங்கள். உடனே அந்த ஓரத்தில் நெய் உருகிவிடும். உருகிய பகுதியை மட்டும் ஸ்பூனால் எடுத்து, பரிமாறினால் போதும்.  மற்ற பகுதியில் உள்ள நெய் நிறம் மணம் மாறாமல் இருக்கும்



துவையல், இட்லி மிளகாய்ப்பொடி முதலியவை தயாரிக்க, பருப்புகளை வறுப்போம். பருப்பு முதலியவற்றை வறுத்த உடனே சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் அரைத்தால், மிக்ஸி பாதிக்கப்படலாம். அத்துடன் பொடியாக அரைபடவும் நேரமாகும். அதேசயம் வறுத்த பொருட்களை அதிக நேரம் ஆறவிட்டாலும் சரியாக இருக்காது. வெதுவெதுப்பான சூட்டுடன் இருக்கும்போது அரைத்தால் சீக்கிரம் மசிவதுடன், பொடி மொறுமொறுப்பாக நமத்துப் போகாமல் இருக்கும்.



குழந்தைகள் ஸ்வீட் கேட்கிறார்களா? அரை டம்ளர் ஓட்ஸை ஒரு டீஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொண்டு, சற்று ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு, கால் டம்ளர் சர்க்கரையும் சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். தேவைக்கேற்ப, உருக்கிய நெய், வறுத்த முந்திரி, ஏலக்காய்ப்பொடி சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், சத்தான ஓட்ஸ் ஸ்வீட் ரெடி.