உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கில் உள்ளோர்க்கு போதுமான அளவு பாதுகாப்பான குடிநீரும், இதர வசதிகளும் இல்லை. இது அவ்வளவு அதிர்ச்சித் தரும் விஷயமாக இருக்காது, ஏனென்றால் நாம் சாதாரண வாழ்க்கையிலே இதனைக் காண்கிறோம். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இத்தகைய மக்களுக்குத் தொற்றக்கூடிய நோய்களான காலரா, அர்செனிகோசிஸ், மலேரியா, ஃப்ளோரோசிஸ் மற்றும் பிற அபாயகரமான நோய்கள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்பது தான்.
இது போன்ற நீரின் மூலம் பரவும் நோய்களினால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றால், கற்பனை செய்துபாருங்கள். இது ஒருபுறம் அதிர்ச்சியளித்தாலும், இத்தகைய துப்பரவான வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுவதில் வளர்ந்து வரும் நாடுகள் முக்கியமாக தெற்காசிய நாடுகள் முதலிடத்தில் உள்ளது, எனும் செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற இறப்புகள் ஏற்படுவதில், சுத்தமற்ற தண்ணீரால் ஏற்படும் குழந்தைகளின் இறப்புகள், தரவரிசையில் இரண்டாவது இடமாக உள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு போரினால் இறப்பவர்களை விட அதிகமானோர் சுகாதாரமான வசதிகள் இல்லாமல் இறக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.