உங்கள் வாழ்க்கையில் எத்தனை தடவை உங்கள் முன்னே நிற்கும் ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று அறிய விருப்பப் பட்டிருப்பீர்கள்? அந்த நபரிடம் நேரடியாகக் கேட்காமல், அவர் நினைப்பதை ஓர் புத்தகம் வாசிப்பது போல் வாசிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? நல்லா இருக்கும் தானே? என்ன, அது முடியாது என்று நினைக்கின்றீர்களா? முடியும்! வருங்காலங்களில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது, நண்பர்களே!
நரம்பணுவியலாளர்கள் (neuroscientist) தற்போது விதம் விதமான வழிகளில் நமது மூளையில் உள்ள எண்ணங்களைப் படிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். அதற்கு நமது மூளையின் மின்னோட்ட அலைகளை எந்திரங்கள் ஊடாக ஒரு விதமாக மொழிபெயர்த்து நமது எண்ணங்களைப் படிப்பதே அவர்களின் நோக்கம் ஆகும். உண்மையில் இந்த ஆராய்ச்சி dementia எனப்படும் மறதிநோயை ஆராய்வதற்குச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விஞ்ஞானத்தில் உள்ள அழகே இது தானே, ஒரு துறையில் செய்யும் ஆராய்ச்சி பல்வேறு துறைகளுக்கு உதவும் என்பது.
நண்பர்களே, இதைப் பற்றி உங்களது கருத்து என்ன? எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணினியில் உள்ள டேட்டா (data) திருடுவது போல், உங்கள் மூளையில் உள்ள எண்ணங்களைத் திருட வாய்ப்புகள் இருக்கலாம் என்று நினைக்கும் போது என்ன தோன்றுகிறது?