Author Topic: எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லையா?  (Read 633 times)

Offline Little Heart

எலிகள், பொதுவாக ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம் ஆகும். ஒத்த இனம் (inbred), கலப்பு இனம் (outbred) மற்றும் மரபியல் மாற்றமடைந்த இனம் (transgenic) போன்ற நூற்றுக்கணக்கான சுண்டெலி வகைகள் உள்ளன. அவை அமைப்பொப்புமையில் (homology) கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே உள்ளன. சுண்டெலிகளின் மரபணுக்களை வரிசைமுறைப் படுத்திய பொழுது, அவற்றின் பெரும்பாலான மரபணுக்கள் மனிதர்களின் மரபணுக்களுடன் ஒப்புமை உடையதாய் இருந்தது. உலகம் முழுதும், பல ஆராய்ச்சிகளை இந்த சிறிய விலங்கில் செய்து தான் அறிவியல் இன்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடது.

இப்படியான ஓர் ஆராய்ச்சி தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்று வருகிறது. அது என்னவென்றால், விஞ்ஞானிகள் எலிகள் வயதாவதைத் தடுக்கும் ஆராய்ச்சி மேற்கொண்டு, அதில்  வெற்றியும் பெற்றனர். ஆனால், இப்பொழுது அவர்கள், எலிகளின் வயதை முற்றிலும் தலைகீழாக மாற்றவும் கண்டுபிடித்துள்ளனர். இது அறிவியலில் ஒரு பெரும் முன்னேற்றம் என்பது உங்களுக்கு நன்றாகவே புரியும். எலிகள் மற்றும் மனிதர்களது பல மரபணுக்கள் ஒற்றுமையாக இருப்பதால், வருங்காலத்தில் இந்த நடை முறையை மனிதர்களுக்கும் பயன்படுத்தி, அவர்களது வயதை நிறுத்தி வைத்திடலாம் என்றும் கனவு காண்கிறார்கள், விஞ்ஞானிகள்.

எனவே, எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பே இல்லையா?