Ad by Radsteroids
எதிர்காலத்தில் நாம் மேட்ரிக்ஸில் வாழப்போகின்றோமாவிமானம் ஓட்டுவதற்கோ அல்லது புதிய மொழி கற்றுக் கொள்வதற்கோ நாம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாத ஓர் புதிய முறை வந்துவிட்டது என்று பொஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் க்யொடொ, ஜப்பானில் உள்ள கணினி நரம்பியல் சார்ந்த அறிவியற்கூடமும் கூறுகின்றது. எதிர்காலத்தில் ஒரு கலையைக் கற்க ஒன்றுமே செய்ய வேண்டாம், கணினி முன் அமர்ந்து இருந்து அந்தப் புதியக் கலையை பதிவேற்றம் செய்யக் காத்திருந்தால் மட்டும் போதும். அத்துடன் நீங்கள் அந்தக் கலையில் சிறந்தவர்கள் ஆகிவிடுவீர்கள். என்ன நண்பர்களே, இது எங்கேயோ பார்த்த மாதிரி இல்லையா? நிச்சயமாக! இந்தக் காட்சி மேட்ரிக்ஸ் எனப்படும் அறிவியல் புனைக்கதை (Science Fiction) ஹாலிவுட் திரைப்படத்தில் வந்தது!
பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதியாகத் தெரியும் அவர்களது கண்டு பிடிப்பு வெற்றி என்பது. அதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் அதைத் தங்கள் ஆராய்ச்சி பணிக்காக உள்ளவர்களிடம் பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனவே, மிக விரைவில் இவ்வாறான முறைகளில் நாம் நமக்குத் தெரியாத கலைகளை மிக இலகுவாகக் கற்றுகொள்ளப் போகின்றோம்.
நான் முதல் வேலையாகச் சமையல் எப்படி செய்வது என்பதைத் தான் கற்றுக்கொள்வேன் நண்பர்களே. இன்று வரை எனக்குப் புரியாத விஞ்ஞானம், சமையல் என்னும் விஞ்ஞானம் தான்