நமக்கு ஏதாவது எதிர்மறையாக நடக்கும் போது நாம் பெரும்பாலும் அழுவதுண்டு. ஆனால், அழுகை என்பது எவ்வளவு ஓர் முக்கியமான செயல் என்பது உங்களில் எத்தனை பேர்க்குத் தெரியும், நண்பர்களே? ஓர் ஆராய்ச்சியின் படி பெண்கள் சராசரியாக ஒரு ஆண்டில் 47 முறை அழுகிறார்கள் என்றும், ஆண்கள் அதே நேரத்தில் 7 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், அழும் பெண்களில் 83 சதவீதமானோரும், ஆண்களில் 73 சதவீதமானோரும் அழுதுமுடித்த பிறகு நன்றாக உணர்கிறார்கள் என்பது தான். இதனால் தான் ஆராய்ச்சியாளர்கள் அழுகை என்பது ஓர் மிகவும் சிறந்த விடயம் என்கிறார்கள்.
இதில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையென்றால், அழுகையைப் பற்றி சில உண்மைகளை அறியத் தருகிறேன், படியுங்கள்.
1. அழுவதால் மன அழுத்தம் குறைகிறது.
2. அழுகை, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்துடிப்பின் அளவினைக் கட்டுப்படுத்தும்.
3. அழுகை, நமது இரத்தத்தில் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்தும் மாங்கனீசைக் குறைக்கும்.
நண்பர்களே, இனி அழுகை வந்தால் அதைக் கட்டுப்படுத்தாமல் அழுதுவிடுங்கள். மற்றவர்கள் அழுதாலும் அவர்களைக் கட்டாயம் அழவிடுங்கள்.