Author Topic: உடலின் மிகவும் வலுவான பகுதி எது?  (Read 616 times)

Offline Little Heart

நண்பர்களே, உடலின் மிகவும் வலுவான பகுதி எது என்று கேட்டால் நீங்கள் எதைக் கூறுவீர்கள்? பெரும்பாலானோரின் பதில் எலும்பு என்று தான் இருக்கும். அதற்கு மேலும் கேட்டால் தலையிலுள்ள எலும்பு, கையில் உள்ள எலும்பு என்று எலும்பின் இருப்பிடங்களை ஒவ்வொன்றாக வகைப்படுத்த ஆரம்பித்துவிடுவர். ஆனால், நமது பற்களைச் சுற்றியுள்ள எனாமல் எனும் பகுதி தான் உண்மையில் உடலிலே மிகவும் வலுவான பகுதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

மென்மையான கூழ் போன்ற இந்த அமைப்பு இணைப்புத் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்பு இழைகள் ஆகியவற்றால் ஆனது. நமது வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் உள்ளபோது, அவை இந்த எனாமலினைக் கரைக்கத் தொடங்கும். இவை அளவுக்கு அதிகமாக கரைக்கப்படும் போது, நரம்பு இழைகளைப் பாதிக்கத் தொடங்கும். இதனால் அதிகப்படியான பல்வலி வரவும் வாய்ப்புள்ளது.

நண்பர்களே, நமது உடலே நமக்கு ஒரு புரியாத புதிர் ஆகும்.