Author Topic: மாற்றி யோசி  (Read 5534 times)

Offline Global Angel

மாற்றி யோசி
« on: December 15, 2011, 10:46:39 PM »
மாற்றி யோசி
'அந்த ஏழு நாட்கள்' கே. பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான வெற்றிதிரைப்படம், இந்த திரைப்படம் முழுவதுமே ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம், இடையிலே வருகின்ற பாடலில் கூட கதையம்சத்தின் தொடர்ச்சி இடைவெளி கொடுக்காமல் காண்போரை இருக்கையிலேயே உட்காரச்செய்த திரைக்கதை. இவரது திரைப்படங்கள் எல்லாமே இதே வகையை சேர்ந்தவைதான். இயக்குநர் தான் இயக்கும் திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரமேற்று நடித்து முத்திரை பதிப்பது என்பது இவரது தனி சிறப்பு.

மலயாளீயாக இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், தான் காதலிக்கின்ற பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கவிருக்கின்ற செய்தி அறிந்த போது தன்னுடன் இருக்கின்ற சிறுவன் கேட்பது போன்ற வசனமொன்று அந்த பெண்ணை அவரது வீட்டிற்க்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளச் சொல்லி யோசனை கூறுவது போலவும் அதற்க்கு பாக்கியராஜ் அவ்வாறு அப்பெண்ணை கூட்டிச்சென்று திருமணம் செய்துகொள்வது தவறு என்று கூறிவிட்டு, ஒரு மலையாளி செய்கின்ற தவறால் எல்லா மலையாளிகளுக்கும் அவப்பெயர் ஏற்ப்படும் அதனால் அவ்வாறு செய்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்று விளக்குகின்ற காட்சி மிகவும் யதார்த்தமாகவும், நினைவில் நீங்கா இடம் பிடிக்கவும் செய்தது.

இந்த கருத்து மிகவும் யதார்த்தமான கருத்து என்றாலும் அவ்வாறு யாரோ ஒருவர் செய்கின்ற தவறு குறிப்பிட்ட சமுதாயத்தை குற்றப்படுத்தும் என்கின்ற உணர்வை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பைப்பற்றிய தகவல்கள் செய்திகளில் வந்தவண்ணம் உள்ளது, குறிப்பிட்ட தீவிரவாத கும்பல் செய்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் மும்பையிலும் நடத்தப்பட்ட தீவிரவாத கொடூரங்களையும் டெல்லி உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் நடந்த குண்டு வெடிப்புவரை செய்திகளில் இவற்றை காணுகின்ற உலக மக்கள் குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது கோபமும் வெறுப்பும் ஏற்ப்படுத்துவதாக உள்ளது, ஒரு மனிதனை (குற்றவாளியை) மீட்பதற்கு ஏறக்குறைய 11 அப்பாவிகள் பலியாவதும் எண்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வேதனைக்குள்ளாக்குவதும் விவேகமற்ற செயல்.

ஆடு மாடு ஒட்டகங்களை உண்பதற்காக கொல்வது பழகிப்போனதாகவும் பாவமற்ற செயலாகவும் இருக்கலாம். ஆனால் மனித உயிர்களை எடுப்பது அதிலும் அப்பாவிகளின் உயிரை கொல்வது என்பது தீரா பாவம். கோரிக்கைகளை முன் வைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்க குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று தான் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்க்க மாட்டார்கள். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எத்தனை பணம் கொடுத்தாலும் இறந்து போன நபரின் இடத்தை ஈடு செய்ய இயலுமா. தீவிரவாதம் என்பது அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்குவது என்றால் அதற்க்கு முடிவே இராமல் போகும். அப்பாவிகளின் உயிரை பறிப்பதை கைவிட்டு வேறு நல்ல வழிமுறைகளை கையாள தீவிரவாதிகள் மாற்றி யோசிக்க வேண்டும்