சொல்வதெல்லாம் உண்மை
குறையாத வெப்பம் வெயலின் சூடு தணியாத வானிலை, குளிர்சாதன பெட்டியினால் உண்டாகும் குளிர்ந்த அறையினுள் முடங்கி கொண்ட போதும் மனதினுள் நினைவலைகள் ஏற்படுத்திய வெப்ப காற்று உடலை மீண்டும் வியர்க்கச் செய்தது..............
அந்தச் சிறுவனுக்கு வயது பத்து, பசிக்கு உணவும் உறங்குவதற்கு வீடும் இல்லாத சிறுவன், அவனுக்குத் தெரிந்தது பசி எடுத்தால் காண்போரிடம் கை நீட்டுவது கிடைக்கும் காசில் ஏதேனும் வாங்கி தின்பது. உறக்கம் வந்தால் எங்கேயாவது படுத்துறங்குவது. அன்றைக்கு அவனது பசிக்கு தீனி ஏதும் கிடைக்கவில்லை. தான் எப்போதும் வாங்கும் கடைக்குச் சென்று தின்பதற்கு ஏதேனும் கொடு காசு கிடைத்தவுடன் கொடுத்துவிடுவேன் என்ற பாவனையில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்த கடை முதலாளியை பார்த்தபடி நின்றிருந்தான். தேநீர் கடைக்காரன் 'போடா பிச்சை எடுத்து காசு கொண்டா, இப்போ இங்கிருந்து போடா' என்று கோபத்துடன் சிறுவனை திட்டினான், சிறுவனுக்கு வயிற்றுப் பசியில் கடைக்காரனது கோபக் குரல் கேட்கவில்லை, தேநீர் கடைக்காரன் தான் ஆற்றிக்கொண்டிருந்த சூடான தேநீரை அந்த சிறுவனின் முகத்தில் வீசினான், வாய்விட்டு கத்துவதற்க்குக் கூட உடலில் தெம்பில்லாமல் அந்த சிறுவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
பெருத்த ஒலியுடன் தேநீர் கடையில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சிறுவன் கண்ட காட்சி தேநீர் கடை முழுவதும் தீ, தேநீர் கடைக்காரனின் உடல் முழுவதும் தீ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒருவழியாக படிப்பை முடித்து ஏழ்மைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் வந்தாகி விட்டது என்ற மன நிம்மதி, அன்றைய தபாலில் வந்திருந்த நேர்முக தேர்விற்கான கடிதங்களை படித்துவிட்டு மனதில் ஓடிய எண்ணச் சுமைகளை ஒருகணம் மறந்து, வயிற்றில் குடல்கள் உணவிற்காக கத்தும் சத்தம் காதை அடைக்க, குடத்திலிருந்த குடிநீரை பருகுவதற்கு குடத்தை திறந்த போது வண்டல் நீர் இருந்தது, அவளது தாய் வீட்டு வேலை செய்துவிட்டு வந்தால்தான் குடிநீர் முகர்ந்து வரவேண்டும். பாவம் தன் தாய், தனது பசியை பொறுத்துக் கொண்டு வேலை பார்க்கும் வீடுகளில் கிடைக்கும் உணவை தன் மகளுக்கு சேமித்து வைத்து எடுத்துவருவதற்குள் மணி மதியம் இரண்டை தாண்டிவிடும். குடத்தை எடுத்துக் கொண்டு குடிசையின் அருகிலிருந்த கிணற்றில் குடிநீர் எடுத்துவர சென்ற போது அந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவின் வீட்டை கடந்து செல்ல, வீட்டினுள்ளிருந்த கிணற்றின் சொந்தக்கார அம்மாவிற்கு என்ன தோன்றியதோ வேகமாக வீட்டிலிருந்து வெளியே வந்து குடத்துடன் நீர் எடுக்க வந்த அந்த பெண்ணின் எதிரிலேயே வேகமாக கிணற்றில் போடபட்டிருந்த கயிற்றையும் வாளியையும் எடுத்துச்சென்று தனது வீட்டினுள் வைத்து விட்டாள்.
குடிநீர் எடுக்கச் சென்ற இளம் பெண்ணிற்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. காலி குடத்துடன் தன் குடிசைக்குத் திரும்பியவள் தன் தாய் களைப்புடன் வீட்டினுள் இருப்பதை கண்டு ஒன்றும் பேசாமல் காலி குடத்தை வாசலிலேயே வைத்துவிட்டு குடிசையினுள் சென்று அன்றைய தபாலில் தனக்கு வந்திருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான கடிதங்களைப்பற்றி தனது தாயிடம் கூறி தங்களது வறுமை ஒழியப்போகின்ற குதுகலத்தை பகிர்ந்து கொண்டாள், குடிநீர் எடுத்து வராததன் காரணத்தையும் தன் தாயிடம் சொல்கிறாள். அந்த ஏழைத் தாய் குடிநீர் எடுத்து வருவதற்காக அதே கிணற்றை நோக்கி செல்கிறாள், தங்களது தேவைக்கான நீரை கிணற்றிலிருந்து எடுத்துக்கொள்வதற்க்கு கைமாற்றாக அந்த ஏழை தாய் அவர்கள் வீட்டு வேலைகள் பலவற்றை இலவசமாக செய்வதுண்டு. அந்த ஏழைத் தாய் செய்த இலவச உதவிகளைப் போல அவளது மகள் இலவச உதவிகளை தங்களுக்கு செய்து தருவதில்லை என்பதே அந்த 'கிணற்று'அம்மாளின் கோபம்.
சம்பவம் நடந்த அடுத்தநாள் இரண்டு ரவுடிகளும் அவர்களது குழுக்களும் அங்கு எதிர்பாராமல் திடீரென்று மோதிக் கொண்டது, அவ்வாறு மோதிக்கொண்ட போது ஒருவரையொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதை அறியாமல் வேடிக்கை பார்க்க வீட்டை விட்டு வெளியே வந்த அந்த 'கிணற்று'அம்மாவின் கைகளில் யாரோ ஒருவன் எறிந்த ஆயுதம் வேகமாக விழுந்ததில் வலதுகை பழுதடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அந்த 'கிணற்று'அம்மாவுக்கு பின்னர் பாதி கையை முற்றிலுமாக அகற்றும் நிலை ஏற்பட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அந்த பையனுக்கு சுமார் பதினெட்டு வயதிருக்கும் அந்த பெண்ணிற்கு இருபது வயதிருக்கும், இருவரும் அடுத்த வீட்டில் வசிப்பவர்கள், இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்து வந்தனர். பையனின் வீட்டில் பணவசதி அதிகம் இருந்ததால் அதிகம் பணம் கட்டி ஆங்கிலப்பளியில் படிக்க வைத்தனர். பையனுக்கு படிப்பைத் தவிர மற்ற எல்லாம் எளிதில் கைவந்த கலையாக இருந்தது, ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு முறை படித்து வந்ததினால் பதினெட்டு வயது முடியும் வரை பள்ளியிறுதி வகுப்பை அடைய இயலவில்லை. இரவில் படிக்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த வீடுகளின் தென்னை மரங்களில் காய்த்திருக்கும் தேங்காய், இளநீர் போன்றவற்றை வெட்டி எடுத்து வந்து வெட்டித் தின்பது வழக்கம். தெருவில் குலைக்கும் நாய்களை அடித்துக் கொன்று பாழடைந்த கிணறுகளிலும் வாய்க்கால்களில் எறிவது போன்ற பல அக்கிரம செயல்களுக்கு சொந்தக்காரன்.
அடுத்த வீட்டு இருபது வயது பெண்ணை நோட்டமிடுவது தனது தாயின் தங்கை மகளை, தங்கையுடன் உடலுறவுகொள்வது போன்ற அகிரமங்கள் செய்வதில் வல்லவன், அதைவிட கொடுமை அவன் வீட்டில் இருந்த கன்று குட்டிகளுடன் உடலுறவு கொள்வது. இவனது இந்த வீர தீர சாகசங்கள் அந்த பகுதியில் பிரசித்தம். அடுத்த வீட்டு பெண்ணோ இவனை பார்ப்பது கூட கிடையாது, அந்த பெண் தன்னை கவனிப்பதே கிடையாது என்ற கோபம் அவனது நெஞ்சில் அதிக நாட்களாய் உறுத்தி வந்தது, ஏனெனில் ஏனைய பெண்கள் அவன் அணிந்து வரும் உடைகளையும் ஆடம்பரத்தையும் கவனிக்காமல் இருப்பதில்லை, சில பெண்கள் அவனிடம் இருக்கும் பண புழக்கத்திற்காக போலியான நட்ப்பும் வைத்திருந்தனர். அவனது கோபத்தின் உச்சமாக அடுத்த வீட்டு பெண்ணின் வெள்ளைச் சுவற்றின் மீது அப்பகுதியில் வசித்த வேறு ஒரு பையனுடன் கள்ள தொடர்பு உள்ளது என்று இல்லாதவற்றை எழுதி அசிங்கப்படுத்தினான். தன்னுடன் பிறந்த தம்பிகளைக் கூட விட்டு வைக்கவில்லை அவர்களை எழுத்தில் அடங்காத விதங்களில் கொடுமைபடுத்துவது போன்ற பல அரிய காரியங்களை நடப்பித்து வந்தான், அந்த பையனின் அத்து மீறல்களையெல்லாம் அந்த பையனின் தாயார் கண்டுகொள்வதில்லை மாறாக தாயாரிடம் பையனைப் பற்றி குற்றம் சாட்டுபவரை 'உண்டு இல்லை' என்று வசைபாடுவாள். பையனின் தகப்பனாரிடம் யாரேனும் அவனைப்பற்றி புகார் செய்தால் தகப்பனார் தனது மகனை கண்டிப்பதற்கு விட்டுகொடுக்கமாட்டாள். மாறாக மகன் செய்த தவறுகளை கண்டிக்கும்போது தகப்பனிடம் சண்டையிடுவாள். இவ்வாறாக அந்த பையனின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தது. அந்தப்பையன் புதிய இரண்டு சக்கரவாகனம் ஒன்று வாங்கினான்.
முழு வேகத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பது அவனுக்கு அலாதி சுகம் ஆனால் இரண்டு சக்கர வாகனத்தை வாங்கிய அடுத்தநாள் பெருத்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்டான். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அவனது வலதுகை உபயோகிக்கும் நிலையை இழந்திருந்தது.