கடவுள் அமைத்துவைத்த மேடை .......கிடைக்கும் கல்யாண மாலை
கணவனால் மோசம் அடைந்து விட்டாய், இப்போது எல்லோராலும் விபசாரிஎன்று பெயர் சூட்டப்பட்டு விட்டாய், என்ன வாழ்க்கை இது.......எதை சாதித்தேன்? நிம்மதி இல்லாமல் தவித்தது அவள் மனம்.
அன்றிரவு எல்லோரும் உறங்கிய பின், அந்த மாதத்திற்கு வாங்கிய தூக்கமாத்திரைகளை எடுத்து ஒரேடியாய் வாயில் போட்டு கொண்டு தண்ணீரை மடமடவென குடித்து முடித்தாள் விரித்திருந்த படுக்கை விரிப்பில் சரிந்தாள்.
பொழுது விடிந்தது, உயிரற்ற சடலமாய் அவள்.
பள்ளிக்கூடத்திற்கு போக தயாராகிய மகள் உயிரற்ற சடலம் என்பதைஅறியாமல் உற்று தன் தாயை பார்த்து 'அம்மா போயிட்டு வரேன்'....என்றுசொல்லி விட்டு மீண்டும் தன் தாயை உற்று பார்கின்றாள், மூச்சு விடுவது போலதெரியவில்லை என்று உணர்ந்து தன் தகப்பனை கூப்பிடுகிறாள்.
மாலுவின் கணவன் உள்ளிருந்தவாறே தன் மகளிடம் 'அது தூங்கிட்டு கிடக்கும் நீகிளம்பு ஸ்கூலுக்கு நேரம் ஆகிடுச்சி' .. என்று கூறியபடி மாலு படுத்திருந்தஇடத்தை சற்று தொலைவில் இருந்தே வேண்டா வெறுப்போடு பார்த்து விட்டுவேகமாக கதவை மூடி விட்டு அலுவலகம் சென்று விட்டான்.
தூங்கி கொண்டிருந்தது போலவே மாலு உயிரற்ற உடலாய் படுத்திருந்தாள்
மாலுவின் உயிரற்ற உடம்பில் ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன. சாயங்காலம்மகள் பள்ளிகூடத்தில் இருந்து திரும்பியவள் காலிங் பெல்லை அழுத்தினாள், 'டியூஷன் போக நேரம் ஆகி விட்டது இந்த அம்மா என்னதான் செய்கிறாளோதெரியல.....' என்று முனகியபடி மறுபடியும் காலிங் பெல்லை அழுத்துகிறாள், கதவு திறக்க அவள் அம்மா வரவே இல்லை.
அருகில் இருந்த ஒரு கடை வாசலில் வைக்கபட்டிருந்த பொதுதொலைபேசியிலிருந்து இருந்து அவளது அப்பாவின் ஆபீசுக்கு போன் செய்கிறாள். ' எத்தனை முறை காலிங் பெல்லை அடித்தாலும் அம்மா கதவைதிறக்க வரவே இல்லை.... டியூஷன் போக நேரமாகி விட்டது'.......என்றாள்கோபமாக.
' நான் ஆபீஸில் இருக்கேன் நான் என்ன செய்யமுடியும் உன் அம்மா குளித்துகொண்டிருப்பாள்'...என்றார் அவள் அப்பா.
ஒரு வழியாக ஜன்னல் கதவை உடைத்து அதன் வழியே வீட்டினுள் போய்உள்ளிருந்து வாசற் கதவு திறக்க பட்டது.
வெறுப்புடன் மாலுவின் அருகே வந்து பார்த்தான் மாலுவின் கணவன், சிறியஅதிர்ச்சி! அவன் முகத்தில்!! அடுத்த வீட்டுகாரர்கள் இன்னும் சிலர் வீட்டினுள்வந்து பார்க்க ஆரம்பித்தனர்.....அதில் ஒருவர் உடனே ஆஸ்பத்திரி கொண்டுபோங்கள், போலீசுக்கு போன் செய்யுங்கள்....என்றனர்.
ஆம்புலன்ஸ் வந்தது படுக்கையில் இருந்த மாலுவை தூக்கியபோது அவளதுஉடல் விரைத்து விட்டு இருந்தது, எல்லோருக்கும் புரிந்து விட்டது உயிர் பிரிந்துபல மணி நேரமாகி இருக்கும் என்பது.
பணம் தான் மாலுவின் கணவனுக்கு உலகம், மாலு பணம் சம்பாதிக்கதெரியாதவள் என்ற வெறுப்பு, மாலுவால் பணம் பண்ண தெரியவில்லை, கணவனின் வெறுப்புக்கு ஆளாக வேண்டி இருந்தது, மனைவி என்றும் பாராமல்அவன் அவளை கொடுமைகள் பல செய்து வந்தான்....அதன் பலன் அவள் பணம்பண்ண போன இடத்தில் கற்ப்பு பரி போனது, எப்படியாவது பணம் கொண்டு வந்துகொடுத்து விட எடுத்த முயற்சியில் ,பணம் சம்பாதிக்கவும் முடியாமல், வாழ்க்கை படு வேதனையில் முடிந்தது, தாங்க இயலாமல் தன் உயிரை மாய்த்துகொண்டாள்.
'அப்பா விட்டது சனியன்' என்று நிம்மதி பெரு மூச்சு விட்டான் அவள் கணவன்