Author Topic: ~ 30 வகை பத்திய சமையல்! ~  (Read 1789 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை பத்திய சமையல்! ~
« Reply #30 on: November 22, 2014, 02:18:46 PM »
மாங்காய் வற்றல் குழம்பு



தேவையானவை:
உப்பு சேர்த்து காயவைத்த மாங்காய் வற்றல்  6 துண்டுகள், புளி   நெல்லிக்காய் அளவு, மிளகு  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், எண்ணெய்  25 மில்லி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
மாங்காய் வற்றலை ஊறவைக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மாங்காய் வற்றலையும் அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
இந்தக் குழம்பு, வயிற்றுப் புரட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.