Author Topic: ~ இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு! ~  (Read 793 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு!



''காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு'' என ஒரு பழமொழி உண்டு.

காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும்,
நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.

ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு வகைகள் சிலவற்றை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி சொல்லித்தர, அவற்றை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் பத்மா. 

என்ன சாப்பிட வேண்டும்?
உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.



எவற்றைச் சாப்பிடக்கூடாது?
நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

எப்படிச் சாப்பிடுவது?
இரவு 7  8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சப்பாத்தி  தால்



சப்பாத்திக்குத் தேவையானவை:
கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

தால்  தேவையானவை:
பாசிப்பருப்பு  100 கிராம், இஞ்சி  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழம்  தலா 1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன். கடுகு  ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி  சிறிதளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜவ்வரிசி உப்புமா  வெங்காயச் சட்னி



தேவையானவை:
ஜவ்வரிசி  100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை  தலா ஒரு கப், பச்சைமிளகாய்  1, துருவிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பொட்டுக்கடலை  2 டீஸ்பூன், கொத்தமல்லி  சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய்  1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம்  அரை மூடி.

செய்முறை:
ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வெங்காயச் சட்னி:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவல் தோசை  தேங்காய் சட்னி



தேவையானவை:
அவல்  200 கிராம், அரிசி  100 கிராம், உப்பு  தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல்  சிறிது, மிளகாய்  1.

செய்முறை:
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

வெங்காயச் சட்னி:
ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இடியாப்பம்  சொதி



தேவையானவை:
இட்லி அரிசி  கால் கிலோ, எண்ணெய்  ஒரு ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.

சொதி:
6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழிப்பணியாரம்  சட்னி



தேவையானவை:
இட்லி அரிசி  200 கிராம், வெந்தயம்  2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு  4 டீஸ்பூன், தேங்காய்ப்பால்  100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம்  தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய்  1, கடுகு  ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக  இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கேழ்வரகு தோசை  சட்னி



தேவையானவை:
கேழ்வரகு மாவு  200 கிராம், கடுகு, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  100 மி.லி

செய்முறை:
கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம்,    பெருங்காயத்தூள்,கடுகு  சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.  இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி



தேவையானவை:
கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு  3, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.

கொத்தமல்லி சட்னி:
கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்.