Author Topic: உள்ளே இருக்கிறது உலகம்  (Read 422 times)

Offline thamilan

உள்ளே இருக்கிறது உலகம்
« on: November 21, 2014, 02:42:22 PM »
உள்ளே உள்ள(ம்)து  தான்
உலகம்
அதை உணர்ந்து கொண்டால்
கோடி இன்பம்

பிறப்புக்கு ஒருவழி
இறப்புக்கோ பலவழி
இடைப்பட்ட வாழ்வில்
பிழைப்புக்கு ....
அது நேர்வழி என வாழ்ந்திடுவோம்

முடிந்தால் வாழ வைத்து
வாழுவோம்
இல்லை என்றால் வாழ விட்டு
வாழுவோம்