Author Topic: ~ கேரட் மருத்துவம்:- ~  (Read 335 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கேரட் மருத்துவம்:- ~
« on: November 20, 2014, 07:52:08 PM »
கேரட் மருத்துவம்:-



பால், வெண்ணைய் சாப்பிட்டால் நிறைய வைட்டமின் 'ஏ' கிடைக்கும். அதற்கு வசதியில்லாதவர்கள் நிறைய கேரட் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட அதே அளவு வைட்டமின் 'ஏ' சத்தினை மலிவாகப் பெறலாம். வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும். வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடுங்கள். காரட்டில் 'காரடீன்' என்ற சிறப்புப் பொருள் உள்ளது. இதுவே வைட்டமின் உண்டாவதற்குக் காரணமாக இருப்பது. தொற்று நோய்கள் நமக்கு வராமல் விரட்டுகிறது. உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. இரத்தக் குறைவு காரணமாக உடலில் சோகை ஏற்பட்டால் காரட் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளைச் சரிபடுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. சர்க்கரை நோய் உடையவர்கள் இதனை உண்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும். தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் காரட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. காரட்டை பச்சை உணவாக உண்பதே மிகவும் சிறந்தது.