Author Topic: ~ தினம் ஒரு கீரை! ஒரு கம்ப்ளீட் கைடு ~  (Read 1229 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மலச்சிக்கல் தீர்க்கும் அகத்திக் கீரை

அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது.  சிறு கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், மாவுச்சத்து, புரதம் ஆகியவை இதில் உள்ளன.

பலன்கள்:பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும். டீவார்மிங்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதில் உள்ள கசப்புச் சுவை குடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கவல்லது. குடல்புண், அரிப்பு, சொரி, சிறங்கு போன்ற சரும நோய்கள் விலகும். உடல் சூட்டைத் தணிக்கும்.

டிப்ஸ்: இந்தக் கீரையை நன்றாக வேகவைக்க வேண்டும். பருப்பை வேகவைத்து, பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம்.

கவனிக்க:மருந்து சாப்பிடுபவர்கள் இந்தக் கீரையைத் தவிர்க்கலாம். அனைவருமே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.  தினமும் சாப்பிடக் கூடாது.



சோர்வைப் போக்கும் தவசி கீரை

இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது.

பலன்கள்:ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

டிப்ஸ்: சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அலாதியாக இருக்கும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.செரிமானத்துக்கு புதினாசட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது இதன் சிறப்பு.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செரிமானத்துக்கு புதினா

சட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது தான் சிறப்பு.



சத்துக்கள்: நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, தயாமின் உள்ளன.

பலன்கள்:உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சரும வறட்சியைப் போக்கும். அசைவ உணவுடன் சேர்க்கும்போது செரிமானம் எளிதாகும். மாதவிலக்கு பிரச்னைகள்கூட விலகும். ரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை பெற்றது.  மழைக்காலத்தில் டீயில் போட்டு குடிக்கலாம்.

டிப்ஸ்: புதினா சாதம், புதினா துவையல், புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.

கவனிக்க:அனைவரும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புண்களை ஆற்றும் பருப்பு கீரை

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக் கீரை மிகவும் பிரபலம்.



சத்துக்கள்: இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன

பலன்கள்:வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால், புண் குணமாகும். வியர்க்குரு, சருமப் பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருக்கிறது. உடல் உஷ்ணம் குறையும். எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

டிப்ஸ்: கீரையுடன், பாசிப்பருப்பை வேக வைத்து கடைந்து, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

கவனிக்க:அனைவரும் சாப்பிட ஏற்றது.