Author Topic: ~ டெங்கு காய்ச்சலும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் :- ~  (Read 454 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டெங்கு காய்ச்சலும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் :-




டெங்கு' காய்ச்சல் என்பது ஒரு குடும்ப கூட்டு வைரஸ் கிருமிகளால் மனிதன் பெறும் நோய். இதனை ஒரு குறிப்பிட்ட வகை கொசுக்களே பரப்புகின்றன. ஒரு கூட்டு வகை வைரஸ் கிருமிகள் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு டெங்கு பாதிப்பு பலமுறை கூட ஏற்படலாம்.

ஒரு வைரசால் ஏற்பட்ட பாதிப்பு அடுத்தமுறை அதே வைரசால் ஏற்படாது. டெங்கு பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடிக்கும் கொசு அடுத்த நபரை கடிக்கும் பொழுது நோய் பரவுகின்றது. டெங்கு காய்ச்சலுக்கு எலும்பை உடைக்கும் காய்ச்சல் என்றும் பெயர் உண்டு. அதிக காய்ச்சல், தாங்க முடியாத உடல் வலி, தலைவலி, கண்களுக்கு உள்ளே அல்லது பின்னால் வலி, உடல் சில்லிடுதல், வாந்தி, படபடப்பு ஏற்படும்.

சிறுநீர் வெளிப்போக்கில் இரத்தக்கசிவு ஏற்படலாம். மூக்கிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படலாம். கல்லீரல் வீக்கம் ஏற்படலாம். இரத்த அழுத்தம் குறைவதும், பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதும் இதன் முக்கிய பாதிப்பாக இருக்கும். `ஷாக்' எனப்படும் அதிர்ச்சி, இரத்த வெளிப்போக்கால் ஏற்பட்டு இறப்பு வரை கொண்டு செல்லலாம்.

மூட்டு வலி, சருமத்தில் திட்டுக்கள், வீங்கிய லிம்ப் கோடுகள் இவையும் `டெங்கு' காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பே. குழந்தைகளைப் பாதிக்கும் பொழுது வயிற்று வலியும், இரத்த ஒட்ட பாதிப்பும் ஏற்படுகின்றது.

டெங்கு பரிசோதனை:

* முழு இரத்த பரிசோதனை

* டெங்கு பரிசோதனை போன்றவை ஆகும். டெங்கு வைரஸ் கிருமி மூலம் ஏற்படும் பாதிப்பு என்பதால் குறிப்பிட்ட சிகிச்சை என்பது கிடையாது. ஆனால், நோயாளிக்கு மருத்துவ கண்காணிப்பும், மருத்துவ பரிசோதனையும் மிகவும் அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது இரத்தப் போக்கினை ஏற்படும் அபாயம் கொண்டது.

டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை இல்லையெனில் ஏற்படும் பிரச்சனைகள்: .

* வயிற்றில் அதிக வலி

* வயிற்று குமட்டல்

* உடல் வலி

* கல்லீரலில் நீர் சேர்தல்

* நெஞ்சில் நீர் சேர்தல்

* தலைவலி போன்றவை ஆகும். காய்ச்சலை கட்டுப்படுத்துதலும், பிளேட்லெட் எண்ணிக்கை குறையாது கவனித்து சீர் செய்தலுமே இத்தாக்குதலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை ஆகும். `நில வேம்பு' குடிநீர் இந்த காய்ச்சலுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

பப்பாளி டெங்குக்குத் தீர்வா?

பப்பாளி இலை சாறு டெங்கு காய்ச்சலை சரி செய்வதாகக் கூறப்படுவது எந்த அளவு உண்மை என்ற ஐயம் எழலாம். நிறைய விஞ்ஞான ஆய்வுகள் இதைப் பற்றி செய்யப்பட்டுள்ளன. பப்பாளி இலை சாறு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் திறன் கொண்டது. மலேரியா, புற்றுநோய் இவற்றினை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றன.

பப்பாளி இலையில் உள்ள கைமோபப்பின், பப்பின் என்ஸைம்கள் இரத்தத்தில் பிளேட்லெட் அளவினை சீர் செய்யும் குணம் கொண்டவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கல்லீரலையும் சீர் செய்யும் குணம் கொண்டவை என ஆய்வுகள் கூறுகின்றன.

டெங்கு சிகிச்சை:

வைரஸ் கிருமி என்பதால் உதவியான சிகிச்சை முறைகளே கையாளப்படுகின்றது. உடல் வலி குறைத்தல், காய்ச்சலை கட்டுப்படுத்துதல், உடலில் நீர் சத்து ஏற்றுதல், நோயாளியை முழுமையான ஓய்வு எடுக்கச் செய்தல் போன்றவையே சிகிச்சை முறைகளாக அமைகின்றன.

கூடுதல் சிகிச்சை முறைகள் நோயாளியின் நிலையினைப் பொறுத்தே அளிக்கப்படுகின்றன. பொதுவாக இவர்களை நன்கு நீர் குடிக்க அறிவுறுத்தப்படும். டெங்குவால் இரத்தக் கசிவு ஏற்படுபவர்களுக்குக் கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

* படபடப்பு

* இரத்த கசிவு

* ஜில்லிட்ட உடல்

* நினைவு தடுமாறல்

* குறைந்த இரத்த அழுத்தம் அதிக பாதிப்பிலிருந்து வெளிவருபவரை கீழ்கண்ட முன்னேற்றத்திற்குப் பிறகே வீட்டிற்கு அனுப்புவர்.

* தொடர்ந்து 24 மணிநேரம் ஜுரம் இல்லாது இருத்தல்

* பசி * சரியான சிறுநீர் வெளிப்போக்கு

* இரத்த பரிசோதனை சீராய் இருத்தல்

* சீரான மூச்சு

* பிளேட்லெட் எண்ணிக்கை 50,000 செல்/ஹிலி

டெங்கு தவிர்க்க :

* கொசுக்களாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் வீட்டைச் சுற்றி எங்கும் நீர் தேக்கம் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள்.

* வீட்டிலும் காலி பக்கெட் போன்றவைகளை சிறிதும் நீர் இல்லாமல் கவிழ்த்து வையுங்கள்.

* கொசு தவிர்ப்பிற்கான வலை, மருந்து இவற்றினை கண்டிப்பாய் பயன்படுத்துங்கள்.

* மூடிய கதவின் கீழ் சிறிது இடைவெளி கிடைத்தாலும் கொசு புகுந்து விடும். கவனம் தேவை.

* குப்பை கூடையை நன்கு மூடி வையுங்கள்.

* அறைக்கதவுகளை மூடி சிறிது கற்பூரம் கொளுத்தி வையுங்கள். 15 நிமிடம் கதவை திறக்காதீர்கள். கொசுக்கள் ஓடிவிடும்.

* நொச்சி செடியினை வீட்டில் வைக்க கொசு கிட்டே வராது.