Author Topic: அஷ்ட கோணல் யோகா  (Read 1300 times)

Offline RemO

அஷ்ட கோணல் யோகா
« on: December 15, 2011, 01:59:36 PM »
நேரங்கெட்ட நேரத்தில் வேலை, விடியலில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாச்சாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. பீஸா, பர்க்கர், என பாஸ்ட்புட் அயிட்டங்களை உண்ணுவதால் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர்.

சிறு வயதிலேயே முகம் முழுவதும் சுருங்கிப்போய் காட்சியளித்தால் யாருக்குத்தான் கவலை ஏற்படாது? உங்கள் கவலையை போக்கி முகச்சுருக்கத்தை மாற்ற உணவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை கேளுங்கள்

அஷ்ட கோணல் யோகா


சாதாரணமாக வீட்டில் அமர்ந்திருக்கும் போது கண்களை உருட்டி நன்றாக நாலாபக்கமும் சுழற்றவேண்டும். இதனால் கண்களை சுற்றியுள்ள சுருக்கம் போகும். பின்னர் வாய்க்குள் நன்றாக காற்றை உறிஞ்சி கன்னத்தை உப்ப வைத்து பின்னர் மெதுவாக விட கன்னத்தில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும்.

அடிக்கடி முகத்தை அஷ்ட கோணலாக்கி பின்னர் நேராக்கினால் முகஅழகு அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கு பேஷியல் யோகா என்று பெயர் வைத்திருக்கும் யோகா நிபுணர்கள் முகச்சுருக்கத்தைப் போக்க இந்த யோகாவை பரிந்துரைக்கின்றனர். அமெரிக்காவில் ஏற்கனவே பிரபலமாகி சக்கை போடு போட்ட இந்த யோகா பயிற்சிகள் இப்போது தான் ஏனைய நாடுகளுக்கு படிப்படியாக பரவ ஆரம்பித்துள்ளன.

சத்தான உணவு சுருக்கம் போக்கும்

வைட்டமின் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உண்ணுங்கள் ஏனெனில் இது முகச்சுருக்கத்தைப் போக்கும். கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிட முகச்சுருக்கம் அண்டாது.துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சருமம் பளபளப்பு

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையடைவதோடு முகச் சுருக்கம் மறையும். வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பொன் நிறமாகும்.

முகத்திற்கு எண்ணெய் மசாஜ்

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள் முகம் புத்துணர்ச்சியடையும். இதே முறையை ஆலிவ் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தியும் செய்யலாம் முகத்தில் இளமை பூரிக்கும்

Offline Global Angel

Re: அஷ்ட கோணல் யோகா
« Reply #1 on: December 15, 2011, 09:15:43 PM »


நல்ல தகவல் ரெமோ ... நெல்லி காய் எனக்கு நிறைய பிடிக்கும்


                    

Offline gab

Re: அஷ்ட கோணல் யோகா
« Reply #2 on: December 15, 2011, 10:06:59 PM »
Already younga irukiravangaluku ithu uthavaathu irunthalum futurela uthavum enaku. Nalla thagaval remo.

Offline RemO

Re: அஷ்ட கோணல் யோகா
« Reply #3 on: December 16, 2011, 02:09:52 AM »
// இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர்.//

Gab :D ipa mudivu panunga ithu ungaluku sariyanatha ilayanu:D

thanks angel & gab