« Reply #32 on: November 14, 2014, 01:42:06 PM »
முடக்கத்தான் சூப்
50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும். இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம்.
மருத்துவப் பலன்கள்: 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும். உடல் வலுப்பெறும்.
வல்லாரை சூப்
50 கிராம் வல்லாரைக் கீரையைப் பொடியாக நறுக்கி, பசுமை மாறாமல் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கூடவே விரும்பிய காய்கறிகளைச் சேர்த்துக் கொதித்ததும், மசித்து வடிகட்டவும். இதில் சிறிது கோதுமை மாவு கலந்து தயாரிக்கலாம்.
மருத்துவப் பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல்புண், மாலைக்கண் நோய் சரியாகும்.
பொன்னாங்கண்ணி சூப்
75 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி 250 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இதனுடன் 50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதித்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் கேழ்வரகு மாவைக் கலந்து இறக்கவும். விருப்பப்பட்டால் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்க்கலாம்.
மருத்துவப் பலன்கள்: உடலில் தேமல், சொறி சரியாகும். ரத்தசோகை விலகி, முகம் பொலிவு பெறும். குடல்புண், பித்தம் அகலும். பொன்னிறம் கூடும். கண்ணுக்கு மிகவும் நல்லது.
« Last Edit: November 14, 2014, 01:52:24 PM by MysteRy »

Logged