Author Topic: ~ கம்பு உணவு வகைகள்! சிறுதானிய உணவுகள்!! ~  (Read 3396 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு உணவு வகைகள்! சிறுதானிய உணவுகள்!!



இந்தியா முழுவதும் பல ரூபங்களில் பயிரிடப்படுவது கம்பு. ஆங்கிலத்தில் ஃபியர் மில்லட் என்றும் இந்தியில் ˜பஜ்ரா''எனப்படும். கம்பை அன்னமாகவோ, கூழாகவோ சமைத்து தயிர் அல்லது மோருடன் சாப்பிட்டு வர குடல் கொதிப்பு அடங்கும். உடல் வளர்ச்சிக்கும், பலத்துக்கும் உதவும். உடம்பை தூய்மையாக்கும்.

ஆனால் சொறி, சிரங்கு, இருமல், காசம் உள்ளவர்கள் கம்பை தவிர்ப்பது நல்லது. கம்பு இந்த நோய்களை அதிகப்படுத்தும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு தோசை

தேவை
கம்பு-1கப்
பு.அரிசி-1கப்
உளுந்து-1/2கப்
வெந்தயம்-1டே.ஸ்பூன்
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

செய்முறை
கம்பு, அரிசி இரண்டையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தது வெந்தயம் சேர்த்து தனியாக ஊற விடவும். ஊறிய பின் சுத்தம் செய்து உளுந்து வெந்தயம் நன்றாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும். பிறகு அரிசி கம்பு நைஸாக தோசை மாவு போல் அரைத்து உப்பும், உளுந்துமாவும் சேர்த்து கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசை வார்த்தால் நன்றாக பட்டு போல் தோசை வார்க்க வரும். இதற்க்கு எந்த சட்னி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு சத்து மாவு

தேவை
கம்பு-300கிராம்
கோதுமை, ஜவ்வரிசி, உடச்ச கடலை தலா-100 மி.கிராம்
வேர்கடலை வறுத்து தோல் நீக்கியது-50மி.கி.
சுக்கு பொடி-2டீஸ்பூன்

செய்முறை
முதல் நாள் இரவு கம்பை தண்ணீரில் ஊற விடவும். மறுநாள் நன்றாக சுத்தம் செய்து வடிகட்டி நிழலில் ஒரு துணியில் பரத்தி ஈரம் போக காய போடவும். காய்ந்ததும் அடுப்பை ஆன் செய்து கடாயை காய வைத்து, காய்ந்ததும் வடிகட்டிய கம்பை கொஞ்சமாக கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும். முழுவதுமாக வறுத்த பின் அதே கடாயில் கோதுமை, ஜவ்வரிசி, உடச்ச கடலை தனித்தனியாக வறுத்து கொண்டு ஆறிய பின் எல்லாமாக சேர்த்து வேர்கடலையும் சேர்த்து மிஷினிலோ (அல்லது) மிக்ஸியிலோ மாவாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவில் சுக்கு பொடி கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவு தான் கம்பு சத்து மால இந்த மாவில் கஞ்சி செய்து கொடுத்தால் சிறுவர்களிலிருந்து வயதானவர்கள் வரை அருந்தாலம். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியம். 2 ஸ்பூன் மாவுடன் சிறிது வெல்லம் பொடித்து போட்டு நெய் சூடாக்கி மாவில் சேர்த்து பால் சிறிது சேர்த்து கலந்து குழந்தை (அதாவது) 4-5 வயதான குழந்தைகளுக்கும் ஸ்கூல் படிக்கும் குழந்தைகளுக்கும் எல்லோருமே சாப்பிடலாம். கம்பு மிகவும் குளிர்ச்சியும் கூட உடம்புக்கு நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு அடை

தேவை
கம்பு-1கப்
ப.அரிசி-1/2கப்
க.பருப்பு,து.பருப்பு தலா-1/4கப்
உளுந்து-1டே.ஸ்பூன்
பாசிப்பருப்பு-1 டே.ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
சிவப்பு மிளகாய்-2
கறிவேப்பிலை-2ஆர்க்கு
இஞ்சி-சிறியதுண்டு
தேங்காய்த்துருவல்-1/4கப்
உப்பு-தேவைக்கேற்ப
ஜீரகம்-1/2டீஸ்பூன்
எண்ணை-தேவையான அளவு
சின்ன வெங்காயம் (சாம்பார்)-10

செய்முறை
முதலில் கம்பு ப.அரிசியும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, பருப்பு வகைகளையும் எல்லாமாக சேர்த்து ஊற விடவும். ஊறியதும் அரிசி கம்பு சுத்தம் செய்து உப்பு, பெருங்காயம், ப.மிளகாய் சிவப்பு மிளகாய் சேர்த்து (இஞ்சியையும்) அரைத்து கொள்ளவும். (தோவை மாவு போல்) அரைக்கவும். பருப்பு வகைகளையும் அரைத்து அரிசி பருப்பு மாவுகளை நன்றாக சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய் துருவல், ஜீரகம், வெங்காயம் பொடியாக அரிந்து எல்லாமாக கலந்து அடுப்பை பற்ற வைத்து, தவாவை காய வைத்து காய்ந்ததும் அடையாக சுட்டு எடுக்கவும். இருபுறமும் நன்றாக வேக விட்டு மொறு மொறுப்பாக சுட்டு எடுத்து பரிமாறவும் இதற்கு தொட்டு சாப்பிட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பங்கூழ்

தேவை
கம்பு
நொய்யரிசி - 1 பிடி
உப்பு
தயிர்

செய்முறை
கம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]
இதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.
அடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.

கூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டு.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்மங்கொழுக்கட்டை

தேவை
கம்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 4.

செய்முறை
கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி, புடைத்தால், மேல் தோல் முழுதும் வந்து விடும்.பிறகு வெறும் வாணலியில் இட்டு, கம்பு சிவக்கும் வரை வறுக்கவும்.வறுத்த கம்பை நைசாக அரைக்கவும்.வெல்லத்தை தூளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும்.கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும்.ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

நல்ல வாசனையும், சுவையும் உள்ள, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான, கொழுக்கட்டைகள் தயார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு இட்லி

என்னென்ன தேவை?
கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை - 6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம் அரைக்கவும். வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.

கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். துணியில் ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத் தவிர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு இனிப்பு அடை

என்னென்ன தேவை?
கம்பு மாவு - 1 கப்,
வெல்லம் - கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் அல்லது நெய் - சிறிது.

செய்முறை
வெல்லத்தை சிறிது தண்ணீரில் போட்டுக் கரைத்து வடிகட்டவும். அந்தத் தண்ணீரை, கம்பு மாவில் விட்டு, உப்பு சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன அடையாகத் தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு, இரு புறமும் வேக விட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு வாழை இலை அடை (இனிப்பு)

என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - அரை கப்,
முந்திரி - 6,
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வாழை இலை - 5.

செய்முறை
மேல் மாவுக்கு...
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து வைக்கவும்.

பூரணம் செய்ய...

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் இந்த பூரணத்தை போட்டு சுருள கிளறவும். கிளறியதும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆறவிடவும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவும். அதில் கம்பு மாவை வைத்து தட்டி பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 4 பாரம்பரிய இந்த இனிப்பு அடையை கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு பருப்பு சாதம்

என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப் பயிறு - கால் கப்,
தண்ணீர் - 3 கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நறுக்கிய தக்காளி - அரை கப்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்.
பொடித்துக் கொள்ள...
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2,
பூண்டு - 4.

செய்முறை
கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அரிசி, பருப்பையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் வேகவிடவும். தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும். 4 கம்பரிசியை சிறிது குழைய வேக வைப்பது சுவை கூட்டும். பருப்பு வகைகளுடன் தட்டப்பயிறும் சேர்த்துக் கொள்ளலாம்.4 மிளகாய் தூள், மிளகாய் வற்றல், மிளகு போன்றவை சேர்ப்பதால் காரம் எவ்வளவு தேவையோ அதற்கேற்பபிரித்துக் கொள்ளவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிக்ஸ் மில்லட் அடை

என்னென்ன தேவை?
கம்பு - கால் கப், ராகி - கால் கப்,
தினை - கால் கப்,
வரகு - கால் கப்,
சோளம் - கால் கப்,
துவரம் பருப்பு - அரை கப்,
பாசிப் பருப்பு - கால் கப்,
மிளகாய் வற்றல் - 5,
பச்சை மிளகாய் - 5,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை - சிறிது.

செய்முறை
அனைத்து தானியங்களையும் பருப்புகளையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்புச் சேர்த்து அடையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு சுடவும். தேங்காய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும். 4 அனைத்து தானியங்களையும் தோலுடன் அரைத்தால் வாசனையும் சுவையும் சத்தும் கூடும். 4 விரும்பினால் வெங்காயம் சேர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கம்பு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?
கம்பரிசி - 1 கப்,
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 5,
பொடியாக நறுக்கிய மிளகாய் வற்றல் - 5,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது,
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (விரும்பினால்),
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்
பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில்கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,உ.பருப்பு, க.பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய் வகைகள், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.அரைத்த மாவை கொட்டி, தணலைக் குறைத்துக் கிளறவும். மாவு கெட்டிப் பட்டதும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். ஆறியதும் கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். எள்ளு இட்லிப் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தானிய தோசை

என்னென்ன தேவை?
வரகு, கம்பு, சோளம் - தலா அரை கப்,
உளுந்து - கால் கப்புக்கும் சிறிது அதிகமாக,
துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
அனைத்து தானியங்களையும் பருப்பு வகைகளையும் வெந்தயத்தையும் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தோசைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் வைக்கவும், மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.4 தானியங்களை தோலுடனும் சேர்க்கலாம், தோலுடன் சேர்த்தால் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்போதே உப்பு சேர்ப்பதால் சரியான பதத்துக்கு புளித்திருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிக்ஸ் மில்லட் மசாலா சப்பாத்தி

என்னென்ன தேவை?
கம்பு மாவு - கால் கப்,
சோள மாவு - கால் கப்,
ராகி மாவு - கால் கப்,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தயிர் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை
மூன்று மாவுகளையும் உப்பு, சர்க்கரை, எண்ணெய், தயிர், சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லித்தழை எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்தியாக திரட்டி இடவும். சூடான குருமா அல்லது தக்காளி தொக்குடன் பரிமாறவும்.4 விரும்பினால் வெந்தயக்கீரை, கேரட், முள்ளங்கி போன்றவற்றையும் சேர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிக்ஸ் மில்லட் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?
கம்பு மாவு - கால் கப்,
தினை மாவு - கால் கப்,
ராகி மாவு - கால் கப்,
பனைவெல்லம் - முக்கால் கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - 1 சிட்டிகை,
தண்ணீர் - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி.

செய்முறை
மூன்று மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். பனை வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். மாவில் சூடான வெல்லத் தண்ணீரை விட்டு நன்றாக மிருதுவாக ஆகும் வரை பிசையவும். கொழுக்கட்டை அச்சிலோ அல்லது சிறு உருண்டைகளாக உருட்டியோ ஆவியில் வேக வைக்கவும்.4 பனைவெல்லம் உடலுக்கு மிகவும் நல்லது. சாதாரண வெல்லம் சேர்த்தும் செய்யலாம். விரும்பினால் தேங்காய் துருவல், உலர் பருப்புகளை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.