Author Topic: ~ 30 வகை கரகர மொறுமொறு ரெசிப்பி! ~  (Read 2649 times)

Offline MysteRy



வெளியே மழை 'நச நச’ என்று பெய்து கொண்டிருக்கும்போதும், மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்து உட்காரும்போதும்... "கரகரப்பா, சூடா ஏதாவது செஞ்சு கொடேன்... ப்ளீஸ்'' என்று குடும்பத்தினர் கோரிக்கை வைப்பது இந்த சீஸனில் வாடிக்கையான ஒன்றுதான். இந்த கோரிக்கையை சிறப்பாக நிறைவேற்றி, வீட்டில் உள்ளவர்களை குஷியில் ஆழ்த்த உதவும் வகையில் 30 வகை 'கரகர மொறுமொறு’ ரெசிப்பிக்களை இங்கே வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.



இந்த ரெசிப்பிக்கள் எண்ணெய் பட்சணங்கள் என்பதால், ஜீரணத்துக்காக இஞ்சி, பூண்டு, ஒமம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துள்ளேன். இந்த ஸ்நாக்ஸ்களை அளவுடன் சாப்பிட்டு, வளமுடன் வாழுங்கள்'' என்கிறார் ராஜகுமாரி.

Offline MysteRy

மிளகாய் பஜ்ஜி



தேவையானவை:
கடலை மாவு  ஒரு கப், அரிசி மாவு  4 டேபிள்ஸ்பூன், பஜ்ஜி மிளகாய்  6, மிளகாய்த்தூள்  2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, பேக்கிங் பவுடர்  ஒரு சிட்டிகை, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பேக்கிங் பவுடர், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். பஜ்ஜி மிளகாயை அதில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

ஸ்டஃப்டு பஜ்ஜி



தேவையானவை:
கடலை மாவு  ஒரு கப், அரிசி மாவு  4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  3 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, கார்ன்ஃப்ளார் (சோள மாவு)  2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு  தேவைக்கேற்ப.

ஸ்டஃப் செய்ய:
மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், மெல்லியதாக நறுக்கிய வாழைக்காய், மெல்லியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு  தலா 10 வில்லைகள்.

செய்முறை:
அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். காய்கறிகள் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். முதலில் உருளை வில்லை, அதன் மேலே வெங்காயம், மேலே வாழைக்காய் வைத்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து ஸ்டஃப்பிங் பிரிந்து விடாதவாறு பார்த்து எடுக்கவும்).

Offline MysteRy

உருளைக்கிழங்கு கட்லெட்



தேவையானவை:
கார்ன்ஃப்ளார் (சோள மாவு)  ஒரு கப், ரஸ்க் தூள்  6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு  200 கிராம், கேரட் துருவல்  6 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை  2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம்  ஒன்று, மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன். உப்பு, எண்ணெய்  தேவையான அளவு,

செய்முறை:
உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி... மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். கான்ஃப்ளார் மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து, உருட்டி வைத்த கலவையை அதில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

மிக்ஸ்டு வெஜ் கட்லெட்



தேவையானவை:
கார்ன்ஃப்ளார் (சோள மாவு)  ஒரு கப், ரஸ்க் தூள்  6 டேபிள்ஸ்பூன், பீட்ரூட்  2, ஊறவைத்த பச்சைப் பட்டாணி  அரை கப், வெங்காயம்  ஒன்று, பச்சை மிளகாய்  3, மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:
ட்ரூட்டைத் தோல் சீவி சிறிய கட்டங்களாக நறுக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். ஆறியதும் கெட்டியான வட்டமாக தயார் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும். கார்ன்ஃப்ளாருடன் உப்பு, நீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, வட்டமாக தயார் செய்து வைத்தவற்றை தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

தவலை வடை



தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி  தலா அரை கப், தேங்காய்த் துருவல்  அரை கப், மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  2, கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித் தழை  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பருப்புகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையும் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவினைக் கரண்டியால் எடுத்து, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் ஊற்றவும். (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

Offline MysteRy

பட்டாணிப் பருப்பு வடை



தேவையானவை:
 பட்டாணிப் பருப்பு  200 கிராம், கடலைப் பருப்பு  50 கிராம், அரிசி  ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம்  ஒன்று, பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி  தலா ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய இஞ்சித் துண்டுகள்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  2, உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டிய வடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

முட்டைகோஸ்  கேரட் வடை



தேவையானவை:
 உடைத்த கறுப்பு உளுந்து  ஒன்றரை கப், பச்சை மிளகாய்  2, நறுக்கிய முட்டைகோஸ்  அரை கப், நறுக்கிய கேரட்  4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம்  கால் கப், துருவிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
கறுப்பு உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோல் போகக் கழுவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

புதினா கார மசால்வடை



தேவையானவை:
கடலைப்பருப்பு  ஒரு கப், உளுத்தம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன்,  பட்டாணிப்பருப்பு  3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, சோம்பு  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  3, நறுக்கிய புதினா  6 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பட்டாணிப்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
பருப்புகளை ஊறவைக்கும்போதே மிளகாயையும் அதில் சேர்த்து ஊறவைத்தால், மிளகாய் எளிதில் அரைபடும்.

Offline MysteRy

உருளைக்கிழங்கு மசாலா போண்டா



தேவையானவை:
கடலை மாவு  அரை கப், மிளகாய்த்தூள்  2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, அரிசி மாவு  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

மசாலா செய்வதற்கு:
உருளைக்கிழங்கு  150 கிராம், கேரட் துருவல்  3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்  தலா 2, மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி  தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
நான்காக நறுக்கிய உருளைக் கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்துக் கிளறி, வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து சேர்த்து வதக்கவும். ஆறியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நீர்விட்டு கெட்டியாகக் கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை, இந்தக் கரைசலில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

மிளகு போண்டா



தேவையானவை:
வெள்ளை முழு உளுந்து  ஒரு கப், பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று, பல்லு பல்லாக கீறிய தேங்காய்  3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு ஆர்க்கு, உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

கீரை வடை



தேவையானவை:
முழு உளுந்து  ஒரு கப், பச்சை மிளகாய்  2, நறுக்கிய முளைக்கீரை, பசலைக் கீரை  தலா ஒரு கப், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
முழு உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கீரைகளைச் சேர்த்துப் பிசைந்து வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

பாகற்காய் சிப்ஸ்



தேவையானவை:
பெரிய பாகற்காய்  4, பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, நசுக்கிய பூண்டு  ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு  5 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு  2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, தயிர்  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது). வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

Offline MysteRy

வெஜிடபிள் சமோசா



தேவையானவை:
மைதா மாவு  250 கிராம்,  உருளைக்கிழங்கு  250 கிராம், பச்சைப் பட்டாணி  50 கிராம், பச்சை மிளகாய்  இஞ்சி விழுது  ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள்  10, சீரகம், சோம்பு  தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை  2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன், வனஸ்பதி  50 கிராம், உப்பு, எண்ணெய்   தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பட்டாணி மற்றும் கழுவி, நறுக்கிய  உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு எடுத்து, நீரை வடிகட்டி வைக்கவும். வனஸ்பதியை லேசாக சூடாக்கி... மைதா, உப்பு, சீரகத்தூள் சேர்த்து, நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, எட்டு பாகங்களாக செய்து, நீளவாக்கில் தேய்க்க வேண்டும். அடிகனமான வாணலியில் 3 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி, சோம்பு சேர்த்து, வெடித்ததும் முந்திரி சேர்த்து, பிறகு பச்சை மிளகாய்  இஞ்சி விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், முந்திரி போட்டுக் கிளறவும். வெந்த உருளைக்கிழங்கு (தோல் உரிக்கவும்), பட்டாணியை சேர்த்து வதக்கி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி வைக்கவும்.
நீளமாகத் தேய்த்த மாவினை முக்கோணம் மாதிரி செய்து, வெந்த கலவையில் 3 ஸ்பூன் உள்ளே வைத்து மூடி சமோசாக்கள் செய்துவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை 'சிம்’ மில் வைத்து, செய்துவைத்த சமோசாக்களை பொரித்து எடுக்கவும். 

குறிப்பு:
சமோசாக்கள் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

Offline MysteRy

குணுக்கு



தேவையானவை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா அரை கப், உளுந்து  3 டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி  2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பருப்புகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
2 டேபிஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறிதளவு கறிவேப்பிலையை மாவில் சேர்த்தும் செய்யலாம்.