எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
அறிமுகம் இல்லாமல்
அரட்டை அரங்கத்துக்குள் வந்தோம்
அடிகடி பேசிக் கொண்டோம்
உறவுகளுக்கும் மேலே
நட்பால் இணைந்தோம்
நண்பியே
காலங்கள் கடந்தாலும்
காலன் வந்தெம்மை அழைத்தாலும்
காலங்கள் தோறும்
தொடரட்டும் நம் நட்பு
நண்பியே
நீ பவித்திரமானவள் பரிதவிசானவள்
பிரியமானவள் நிர் தரிசனமானவள்
குழந்தை குணம் கொண்டவள்
கோபம் வந்தால் கொந்தளிக்கும் கடல்
சிடுமூஞ்சையும் சிரிக்கவைக்கும்
சிறப்பாற்றல் கொண்டவள்
நட்பால் என் மனதை
கொள்ளை அடித்து
மனம் முழுவதும்
வெள்ளை அடித்து
அதில் உன் பெயரை
நட்பு உளி கொண்டு செதுக்கி விட்டாயே
அழிக்க முடியுமா அதை
நண்பியே
கண்ணீர் எனக்குப் பிடிக்கும்
மனதில் கவலைகள்
இருக்கும் வரை
உன் நட்பு எனக்கு
ரொம்பப் பிடிக்கும்
என் உயிர் உள்ள வரை
நண்பியே
காரணம் இல்லாமல்
களைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும் நம்
உண்மையான நட்பு.