b]
வெஜிடபிள் புதினா குருமா
தேவையானவை: பீன்ஸ், நூல்கோல், முருங்கைக்காய், கோஸ், காலிஃப்ளவர் (எல்லாம் துண்டுகளாக்கியது) 2 முதல் 3 கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், புதினா ஒரு கப், கொத்தமல்லி அரைப் பிடி அளவு, பச்சை மிளகாய் 1 அல்லது 2, தனியா தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: காய்கறித் துண்டுகளை தண்ணீர் விட்டு, முக்கால் பாகம் வேகவிடவும். வெங்காயம், புதினா, இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, அதிலேயே கரம் மசாலாதூள், பச்சைக் கொத்தமல்லி சேர்த்து சற்று வதக்கி அரைக்கவும். மைய அரைக்கத் தேவை இல்லை. முக்கால் பாகம் வெந்த காய்களுடன் அரைத்த விழுது, தேவையான உப்பு, நீர் சேர்த்து, சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு:தேங்காய் சேர்க்கத் தேவை இல்லை.