Author Topic: ~ பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது:- ~  (Read 638 times)

Offline MysteRy

பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது:-




ஹென்றிக் இப்சன்:-

பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.

பணத்தால் தொடர்புகளைப் பெறலாம்; ஆனால் நண்பர்களைப் பெற முடியாது.

பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

பணத்தால் பலநாள் சந்தோஷத்தைப் பெறலாம்; ஆனால் அமைதியை, இன்பத்தை பெற முடியாது.

ஆண்ட்ரோ மாராயிஸ் :-

பணத்தையோ வெற்றியையோ பேராசையோடு தேடுவதால் துக்கம்தான் ஏற்படும். ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு வெளியே உள்ளவற்றைச் சார்ந்திருக்கச் செய்கிறது.

எட்வர்ட் பாக் :-

மனிதனால் உணவை உண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பணத்தைச் சம்பாதிப்பது, அதன் மூலம் அதிகாரத்தைச் சேர்ப்பதால் வாழ்விற்கு பயனில்லை. வாழ்வு இவற்றை விட மேலானது. இந்த உண்மையை அறியாதவற்கள், அடுத்தவா்களுக்கு சேவை புரிவதால் கிடைக்கும் மாபெரும் சந்தோஷம், திருப்த்தியை அடையமாட்டார்கள்.

ஜார்ஜ் ஹோரேஸ் லாரிபர் :-

பணத்தையும் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனால் அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்து பணத்தால் பெற முடியாதவற்றை நீங்கள் இழந்துவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்வதும் நலமே!!!