விந்தை கருவாக்கி
கருவை உதிரமாக்கி
உதிரத்தை உயிராக்கி
உயிரை உருவமாக்கி
உருவத்தை உலகுக்களித்த அன்னையே
எட்டி உதைத்தாலும்
கட்டி அணைத்தென்னை
உச்சி முகர்ந்திடும் அன்னையே
உன் மடியில் தாலாட்டி
உன் தோளில் சீராட்டி
அன்பு அமுதம் ஊட்டி
கோழியின் சிறகுக்குள்ளே
இதமான அரவணைப்பில் வாழும்
குஞ்சிகள் போலே
பொத்திப் பொத்தி வளர்த்தாயே
இந்த பிறவி போதாது
உனக்கு நான்
பணிவிடை செய்திட
இன்னொரு பிறவி வேண்டும்
அதில் நான் தாயாக
நீ சேயாக பிறந்திட வேண்டும்