Author Topic: பொங்கலோ பொங்கல்  (Read 1222 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பொங்கலோ பொங்கல்
« on: December 14, 2011, 06:26:51 PM »
பொங்கலோ பொங்கல்
முற்றத்தில்...

வண்ண வண்ண கோலமிட்டு
தலை வாழை இல்லை போட்டு
இருபுறமும் மஞ்சள் செடி வைத்து
மாவிலை தோரணங்கள் தலை முட்ட

செந்நிற புதுப்பானை அடுப்பின் மீது
செந்நிற தீநாக்கு நாற்புறமும்
வெண்ணிற பச்சருசி பானையிலே
வெந் நீரோடு புது அரிசி கொதிக்கையிலே
பஞ்சு போல வெந் நுரை எழும்பி
புது பானையின் முழுவதுமாய்
பொங்கி எழ

சுற்றி நிற்கும் உழவர் மக்கள்
பொங்கலோ பொங்கல் என்று
உரத்து கூற
சூரியனாம் அவர் தெய்வம்
தந்த அரிசியினை
நன்றியோடு கும்பிடுவார்
பொங்கலோ பொங்கல் என்று

பொங்கலுடன் இனிப்பும் நெய்யும் இட்டு
இன்பமுடன் உண்டு மகிழ்ந்திடுவர்
தை திருநாளில்.
                    

Offline RemO

Re: பொங்கலோ பொங்கல்
« Reply #1 on: December 15, 2011, 12:26:32 AM »
இதெல்லாம் இப்போ இருக்கா ??

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொங்கலோ பொங்கல்
« Reply #2 on: December 15, 2011, 04:54:09 AM »
பழமையை பின்பற்றுபவர்கள் பாரம்பரியத்தை காபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்  
                    

Offline RemO

Re: பொங்கலோ பொங்கல்
« Reply #3 on: December 15, 2011, 01:19:17 PM »
1000 ல் 1