Author Topic: ~ கோதுமை அல்வா:- ~  (Read 414 times)

Offline MysteRy

~ கோதுமை அல்வா:- ~
« on: October 29, 2014, 08:14:23 PM »
கோதுமை அல்வா:-



தேவையான பொருட்கள்:-

கோதுமைமாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் -2 கப்
நெய் - 5 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
கேசரி கலர் பொடி - சிறிது

செய்முறை:-

1) கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவை போல பிசைந்து கொள்ளவும்.

2) பின் அதை சிறிது சூடான தண்ணீரில் போட்டு 5-7 மணி நேரம் ஊறவிடவும்.

3) கோதுமை கலவையை கலக்கி வடிதட்டில் ஊற்றி திப்பியை எடுத்து விடவும்.

4) நான்ஸ்டிக் பாத்திரத்தில் சக்கரை, 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.

கோதுமை கலவையின் மேல் தெளிந்து இருக்கும் தண்ணீரை முடிந்தவரை எடுத்து விடவும்.

சக்கரை பாகு போல வந்ததும் கேசரி கலர்,கலந்து வைத்த கோதுமை கலவையை சேர்த்து கிளறவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த முந்தரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறினால் கோதுமை அல்வா ரெடி.