கூறி இருக்கலாம் நானோ
அல்லது நீயோ
நம் காதலை மற்றவரிடம்
இல்லை
ஒரு கண்ணசைவிலோ
இல்லை
ஒரு உதடசைவிலோ
கூறி இருக்கலாம் நம் காதலை
என்னை பார்த்ததும்
நிலத்துடன் பேசும் உன் விழிகளில்
நான் எதை புரிந்து கொள்வது
உன்னை பார்க்கும் போது
அலைபாயும் கூந்தலும்
கதை பேசும் காது ஜிமிக்கியும்
என்னை வாய் இருந்தும்
ஊமையாக்கி விடுகின்றனவே
முகம் பார்க்கும் கண்ணாடி
முகம் என்பர்
உன் முகம் பார்க்க
என் கண்ணாடியை துடைத்துப் போட்டிருப்பேன்
பல முறை
ஒரு முறை
தலை நிமிர்ந்து பார்த்திருந்தால்
என் காதலை கண்டிருப்பாய்
என் கண்களில்
உன் கன்னச் சிவப்பில் கண்டிருப்பேன்
நானும் உன் காதலை