காத்திருக்கிறேன்
யாருடன் பகிர்ந்து கொள்வதென்று
சொல்வதா வேண்டாமா
அதுவும் புரியவில்லை எனக்கு
குழம்பிப் போய் இருக்கிறேன் .
கொந்தளித்துப் போய் இருக்கிறேன்
நம்பியவனிடம் நான்
தொலைந்து விட்டேன்
நான் தொலைத்தது
மறுபடி வராத ஒன்று
பெண்மை எனும்
பொக்கிஷத்தை
போற்றத் தெரியாதவன் கையில்
கொடுத்து விட்டேன்
நம்பிக்கை ஒன்றை தான்
நான் அவனுக்கு கொடுத்தேன்
மாமிசத்து அலையும்
ஓநாய் என்று தெரியாமல்
அவனுக்காக அவனுடன்
படுக்கையை பகிர்ந்தேன்
பக்கத்தில் ஒரு தொட்டிலும்
கட்டிவிட்டு அவன் கரைந்து விட்டான்
நான் கனத்துப் போய் நிற்கிறேன்
என் இதயத்தை உடைத்து
அதில் குருதி கொப்பளிப்பதை பார்த்து
குரூரமாஇ சிரிக்கிறான்
அவன் எனக்குள்
விதைத்த விதை
தளிர் விட்டு தழைத்து நிற்கிறது
அறுவடைக்கு யார் வருவார்கள்
மூன்று வருடங்களாக
காதல் நாடகம் நடத்தி விட்டு
நாடகத்தை கலைத்து விட்டு
மறைந்து விட்டான்
அந்த குப்பை குவியலை
சுத்தம் செய்ய முடியாமல்
தவிப்பது நானல்லவா
இன்று கவலை பட்டுப்பட்டு
கண்ணீரும் வற்றி விட்டது
தொலைத்த எனது கற்பு
தேடித் திரிகிறேன் நான்
இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் எழுதியது CUFIE. தமிழாக்கம் மட்டும் எனது.இது அவர்கள் சிநேகிதியின் சோகக் கதை. அனைத்து பாராட்டுகளும் அவர்களுக்கே உரித்தாகட்டும். திட்டுவதென்றால் மட்டும் என்னை திட்டவும்.