மீன் - 250 g
உருளை கிழங்கு - 250 g
வெங்காயம் - சிறியது 10
பச்சை மிளகாய் - 4
மிளகு பொடி 1 தே.க
ஜீரகம் பெரியது - 2 தே.க
கறிவேப்பிலை - 10
உப்பு தேவையான அளவு
தேசி புளி - 1 தே க
முட்டை- 3
ரஸ்க் தூள் 150 g
எண்ணெய்- 250 ml
மீனை 10 நிமிடம் வேகவைத்து அதன் முள்ளை அகற்றி எடுத்து வைத்து கொள்க . அதே போல் உருளை கிழங்கையும் நன்கு அவித்து தோல் உரித்து எடுத்து வைத்து கொள்க ...
வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்க ( மிகவும் சிறிதாக அரிந்து கொள்ளவும் )
மீனையும் அவித்த உருளை கிழங்கையும் ஒன்றாக சேர்த்து பிணைந்து கொள்ளவும் அதனுள் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை , ஜீரகம் .. மிளகு பொடி தேசி சாறு இவற்றுடன் அளவுக்கு உப்பும், சேர்த்து கொள்க . இவற்றை நன்கு சேரும்படி பிணைந்து கொள்க .
அந்த கலவைகளை சிறு சிறு உருளைகளாக உருட்டி எடுத்து கொள்க .. (தேசிக்காய் போன்ற உருளைகள் )
முட்டை வெண்கருவை மட்டும் எடுத்து அதை நுரை வருமளவு நன்றாக அடித்து கொள்க ..
உருட்டி வைத்த உருளைகளை கையில் எடுத்து அடித்த முட்டை வெண்கருவில் தோய்த்து .. ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி .. கொதித்த எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்க .
சூடு ஆறுவதற்கு முன் சாப்டுவது நன்றாக இருக்கும் .
சபா ஸ்ரு எழுதுரதுக்குள்ள ஜீவன் போச்சு.. செய்து சாப்டு சொல்லு