Author Topic: ~ உருளைக்கிழங்கு கார முறுக்கு ~  (Read 417 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு கார முறுக்கு



தேவையானவை:

வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு  ஒரு கப்,  கடலை மாவு, அரிசி மாவு  தலா ஒரு கப், நெய்  3 டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.