Author Topic: ~ பப்பாளி அடை! ~  (Read 505 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227449
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பப்பாளி அடை! ~
« on: October 23, 2014, 05:03:59 PM »
பப்பாளி அடை!

பப்பாளி பழம் மட்டுமல்ல, அதன் காய் கூட சுவைக்கும்... பப்பாளி அடையாக!



தேவையான பொருட்கள்:

மாவு  200 கிராம், உளுத்தம்பருப்பு  50 கிராம், பப்பாளி காய் (சிறியது)  1, பச்சை மிளகாய்  3, வெங்காயம்  2, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கவும். அதோடு சோள மாவு, கறிவேப்பிலை, துருவிய பப்பாளிக்காயைக் கலக்கவும். ஊறவைத்து அரைத்த உளுத்தம்பருப்பை, இந்தக் கலவையில் சேர்த்து, உப்பு போட்டு, தண்ணீர்விட்டு அடை மாவு பதத்தில் நன்றாகக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, எண்ணெய்விட்டு அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.