« Reply #1 on: October 19, 2014, 01:39:32 PM »
மூலிகை மற்றும் கீரை சூப் வகைகள்
மிளகு சூப்

தேவையானவை:
மைசூர் பருப்பு 100 கிராம், வெங்காயம் 1, பச்சைமிளகாய் 2, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகம், மல்லித்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, ஆப்பிள் 1, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த பருப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கொதித்து வரும் போது நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வேக விடவும். நன்றாக மசிந்து வரும்போது, கொத்தமல்லித் தழை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால், க்ரீம் சேர்க்கலாம்.
பலன்கள்:
தினமும் இரண்டு மிளகை மென்று தின்னாலே... இதய நோய் நெருங்காது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பார்கள். மிளகில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளதால் ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். கை கால் நடுக்கம், ஞாபகசக்திக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து.
வாதத்தைப் போக்கும். வீக்கத்தைக் குறைக்கும். பசியைத் தூண்டும். வெப்பத்தைத் தணிக்கும். கோழை நீங்கும்.
« Last Edit: October 19, 2014, 01:44:10 PM by MysteRy »

Logged