அப்பா ,
நான் பிறந்த போது ,
உன் ஸ்பரிசதோடு தொடங்கியது என் வாழ்க்கை !
.
பத்து மாதம் நீ என்னை சுமக்கா விட்டாலும்
இருபது வருடம் மார்பில் சுமந்தவர் நீங்கள் !!
.
என் முகத்தின் சிரிபிக்காக ,
உங்கள் பல ஆசைகளை துறந்தவர் நீங்கள் !
.
என் கண்ணில் வரும் துளி கண்ணீரை கூட
தாங்க முடியாத இதயம் நீங்கள் !!
.
நான் தடுக்கி விழும் நேரங்களில் என்னை
விழாமல் தாங்கி பிடித்தவர் நீங்கள் !!
.
நான் செய்யும் ஒவ்வொரு செயலையும்
பார்த்து ரசித்தவர் நீங்கள் !!
.
நான் வாழ்நாளில் எங்கு சென்றாலும்
யாரை சந்தித்தாலும் உங்கள் அன்பிற்கும் ஈடாகாது !!
.
என்றுமே என் வாழ்வில்
வாழும் தெய்வம் தாங்கள் மட்டுமே !!