மின்வெட்டு ..... ஜாக்கிரதை !!!
அவளுக்கு அன்று ஆபீசில் கொஞ்சம் கூடுதல் நேரமாகிவிட்டது, எப்பவும் வீட்டிற்க்கு திரும்பும் நேரத்துடன் அரைமணிநேரம் கூடுதல் அவ்வளவுதான், அவசராவசரமாக ஒருவழியாக பேருந்தை பிடித்து குறிப்பிட்ட நிறுத்தத்தில் வந்திறங்க படும் அவஸ்தை இருக்கே, பஸ்சில் இருந்த ஜன கூட்டத்திலிருந்து தன்னை பிய்த்து எடுத்து கொண்டு வெளியேறி வீட்டிற்கு போகும் பாதையில் நடக்க துவங்கிய போது தான் தெரிந்தது அங்கு மின்சாரம் இல்லை என்பது, தொடர்ந்து நடப்பதா அல்லது ஏதாவது ஒரு கடையில் நின்றுவிட்டு மின்சாரம் வந்த பின் நடையை தொடர்வதா என்று யோசிக்க, மனம் சொன்னது 'ஏதாவது கடையில் நின்று விட்டு பிறகு போகலாமே' என்று, மூளை சொன்னது 'யாராவது சாலையில் சென்று கொண்டிருக்க அவரது பின்னாலேயே சென்று விடலாமே' என்று.
இந்த மூளையும் மனதும் இப்படித்தான் பல சமயங்களில் பட்டிமன்றம் நடத்தும், மூளை சொன்னபடி கால்கள் தன்னிச்சையாக யாரோ வீதியில் நடந்து கொண்டிருந்தவரின் பின்னாலே சென்று கொண்டிருக்க ஒரு கடையிலிருந்து வந்த emergency விளக்கின் ஒளியில் தான் பின்பற்றும் நபர் ஒரு பெண்தான் என்பது உறுதியானதும் மனது சற்று அமைதியானது, அவரது பின்னாலேயே நடக்க ஆரம்பித்தாள், சிறிது தூரம் நடந்த பிறகு என் முன் சென்ற பெண் ஒரு வீட்டினுள் நுழைந்து விட மறுபடியும் மனம் திக் திக் என்றது,
சிறிது தூரம் நடந்து கொண்டிருக்கும் போது பின்னால் யாரோ ஒருவர் வரும் காலோசை கேட்கிறது, ஹையோ, என்ன செய்வது பின் தொடரும் நபர் ஒரு பெண்ணாக இருந்து விடணுமே, மனம் கிடந்தது தவித்தது, ஒரு ஆணின் காலோசைக்கும் பெண்ணின் காலோசைக்கும் எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது, மனம் பதற ஆரம்பித்தது, காலோசை அருகே மிக அருகே இதோ அவள் தோள் மீது கை ஒன்று வந்து விழுகிறதே, இருதயம் பிளந்துவிடும் போல இருக்கிறது ஓவென்று சத்தமிடலாமா என்று யோசிப்பதற்குள்,
"ஒரு போன் செய்திருக்க கூடாதா, நான் வந்து உன்னை பேருந்து நிலயத்திலிருந்து அழைத்து வந்திருக்கமாட்டேனா" என்றது அவள் கணவனின் குரல்.
அப்பாடா, இருதய துடிப்பின் வேகம் இன்னும் குறையவில்லை, "என்ன ஒண்ணும் பதிலே சொல்ல மாட்டேங்கற" கணவனது கேள்வி உசுப்பியது.
"இல்லை மின்சாரம் இல்லாமல் தெருவில் நடக்க ரொம்ப பயமா இருக்கு அதே பயத்தோட நடந்துக்கிட்டிருந்தேனா, நான் எதிர்பார்க்கல நீங்க வருவீங்கன்னு, உங்க கை தோள் மீது விழுந்ததும் பயந்தே போய்டேன்" என்றால் அவள்.
"அதுக்கு தான் சொன்னேன் எனக்கு ஒரு போன் செய்து இருக்கலாமேன்னு" என்றான் கணவன்.
போனவாரம் இதே தெருவில் அவளது அடுத்த வீட்டுக்காரி அப்படித்தான் வேலை முடிந்து வேகவேகமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாம், யாரோ ஒரு ஆண் இருட்டில் அவளது வாயை இறுகி மூடி அவன் உடலுடன் இறுக அவளை கட்டி பிடித்து அவனது வாயுடன் அவளது இதழை வைத்து அவளை சப்தம் செய்ய விடாமல் வெளியே மற்றவரிடம் சொல்ல முடியாத பாலியல் பலாத்காரங்களை செய்து சில நிமிடங்களில் அந்த கரும் இருட்டில் மறைந்து விட்டானாம் .........யார் அவன் எங்கிருந்து வந்தான், ஒன்றுமே தெரியவில்லை என்று அவள் புலம்பிகொண்டிருந்தது நினைவிற்கு வர .....நெஞ்சம் படபடக்க வீடு வந்து சேரும்வரை மின்சாரம் வரவே இல்லை.