Author Topic: ~ ரவாபூரி பாயசம் ~  (Read 400 times)

Offline MysteRy

~ ரவாபூரி பாயசம் ~
« on: October 14, 2014, 02:21:01 PM »
ரவாபூரி பாயசம்



தேவையானவை:
பேணி ரவை - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பால் - அரை லிட்டர், நெய் - பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 6.

செய்முறை:
பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.