Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்! ~ (Read 656 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்! ~
«
on:
October 12, 2014, 07:25:13 PM »
இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்!
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அந்த சொத்து குறித்தும், முந்தைய உரிமையாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ளவும், அதில் வில்லங்கங்கள் ஏதேனும் உள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும் வில்லங்கச் சான்று பெறுவர். அதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணமும் செலுத்தி, அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் வில்லங்கச் சான்றினைப் பெற்று வந்தனர்.
வில்லங்கச் சான்று பெற காலதாமதமாவதால் அதனை துரிதப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றை விரைவாகப் பெறும் சேவையை துவக்கியது பதிவுத் துறை. இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலமாகவோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்தோ இரண்டு நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இடைத்தரகர்களின் குறுக்கீடு அதிகளவில் இருந்தமையாலும், மக்களிடம் உரிய வரவேற்பு இல்லாததாலும் இச்சேவை வெற்றி பெறவில்லை. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் வசதியை துவக்கியுள்ளது தமிழக அரசின் பதிவுத்துறை. இதனால் பொதுமக்கள் வில்லங்கச் சான்று பெறுவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறுவது எப்படி?
தமிழகப் பதிவுத்துறையின் tnreginet.net என்ற இணையதளத்தில் வில்லங்கச் சான்றைப் பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் To view Encumbrance Certificate என்ற லிங்க்கினை க்ளிக் செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கும் அல்லது பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம்.
மேலும்
http://ecview.tnreginet.net/
என்ற இணைய முகவரியின் மூலமாகவும் நேரடியாக வில்லங்கச் சான்றிதழைப் பெறும் வலைத்தளத்திற்குள் செல்லலாம்.
அந்தத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், எத்தனை ஆண்டுகளுக்கு (தேதி மற்றும் மாதங்கள் உட்பட) வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பத்திரப் பதிவேட்டின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர்அலுவலக ஊர் முதலியவற்றைக் குறிப்பிடுவதன் மூலமும் வில்லங்கச் சான்று பெறலாம்.
பின்னர் அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள் ரகசியக் குறியீட்டு (PASSWORD) எண்ணை அளித்து, அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்றிதழை இணையத்தில் பார்க்கலாம். மேலும் PDF FILE ஃபார்மெட்டில் வில்லங்கச் சான்றிதழை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறும் சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தற்போது 1987-ஆம் ஆண்டு முதலும், அதற்குப் பின்னருமுள்ள ஆண்டுகளுக்கும் வில்லங்கச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சேவையை ஆரம்பித்த சில தினங்களுக்குள் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் நபர்கள் இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழைப் பார்த்துள்ளனர்" என்கிறார் பதிவுத் துறை அலுவலர் ஒருவர்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ இலவசமாக இணையத்தில் பெறலாம் வில்லங்கச் சான்றிதழ்! ~