Author Topic: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2014  (Read 1074 times)

Online MysteRy

நண்பர்களுக்கு .... எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ... சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் வாழ்த்துகளை தாங்கிய கவிதைகளை ஏந்திவர நண்பர்கள் இணையதள வானொலி  காத்திருகிறது ...  உங்கள் வாழ்த்துகள் கவிதைவடிவில் நண்பர்களை சென்றடைய ஆசைப்படுகின்றீர்களா?... எதிர்வரும்அக்டோபர்  16 ஆம் தேதிக்கு  முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ...

கவிதைகள் அதிகமாக பதிவிடும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும் ... குறிப்பிட்ட  தேதிக்கு  முன்னர் பதிவு அனுமதி மூடப்படும் .. எனவே தங்கள் கவிதைகளை விரைவாக பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்


தீபாவளி திருநாளில் நண்பர்கள் வானலை வழியே உங்கள் கவிதைகள் ஒலிக்கட்டும் ... உளம் மகிழட்டும் .
« Last Edit: October 15, 2014, 11:36:27 PM by Forum »

Offline thamilan

தீபத் திருநாளாம் தீபாவளி இன்று
அதிகாலை எழுந்து
தலைமுதல்  கால்வரை  எண்ணைக் தேய்த்து
அசுத்தம் நீங்கக் குளிக்கும் போதே
நம் மனதில் உள்ள அசுத்தங்களையும்
சுத்தம் செய்வோமாக
 
அரக்கனை அழித்து
உலகுக்கெல்லாம் வெளிச்சம் உண்டாக்கிய
இந்த நாளில்
பேராசை, பொறாமை,
கோபம், குரோதம்  என்ற
அரக்கர்களைக்  கொன்று
நம் மனதிலும் சமாதானம் எனும்
தீபத்தை ஏற்றுவோமாக

அகந்தை எனும் அரக்கனை
அழிப்போமாக
அன்பை மட்டுமே
விதைப்போமாகுக

புத்தாடைகள் உடுத்தி
புத்துப்புது நகைகள் அணிந்து
பெற்றவர்கள் பெரியவர்கள்
ஆசிர்வாதம் பெற்று நம்
உற்றவர்க்கும் சுற்றவருக்கும்
வாழ்த்துக்கள் சொல்லும் போதே
நம் வாழ்வுக்கும் நன்றி சொல்வோம்

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும்
சிலைகளாக
மனிதன் தான்
கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துபோகிறான்
காற்றாக - ஆகவே
இனிப்புடன் சேர்த்தே
நம் நட்பையும் அனைவருக்கும் வழங்குவோம்
 

இது வரை நம் இதழ்களை
மவுனம்  மட்டும் அலங்கரித்திருந்தாலும்
இந்த இனியத் திருநாளில்
வண்ண வண்ண இனிய வார்த்தைகள்
மத்தாப்பூவாக
உங்கள் இதழ்களில் மலரட்டும்

பட்டாசு கொளுத்தும் போது
நம் பொறாமை குணத்தையும்
சேர்த்தே கொளுத்துவோம்
வேண்டாத வெறுப்புகளை
வெடித்திடுவோம் சரவெடியாய்

தீபங்கள் வீடுகளில் மட்டுமல்ல
உங்கள் வாழ்விலும் ஒளியேற்றட்டும்
இனிமை இனிப்புகளில் மட்டுமல்ல
உங்கள் இதயங்களிலும் இனிக்கட்டும்
சந்தோசம் என்றும் உங்கள் வாழ்வில்
பூக்களாக பூத்துக் குலுங்கட்டும்
 
அன்பு  நண்பர்கள் அனைவருக்கும்
எனது இனிய தீபாவளி திருநாள்
வாழ்த்துக்கள்
« Last Edit: October 16, 2014, 09:54:06 PM by thamilan »

Offline Maran



தீபாவளி ...

அசுரனை அழித்துவிட்டதற்காய்
அனைவரும் ஆனந்த களிகூத்தாடும்
தீபஒளி  திருநாள்......!!

சொற்குவியலுக்குள்
புதைத்து வைத்த
அற்புத வார்த்தை
தீப ஒளி !!!



என் இன உறவுகளுக்கும்
இன்றுதான் தீபாவளி..!


பிரபஞ்ச எல்லையில்
மீண்டெழமுடியா மனதோடு
சில வன்மங்கள்
எதையும் சாசித்துவிடலாமென்கிற
நம்பிக்கையோடு,

கரைந்த காலங்களை
மனதில் ஊட்டி
நிலவு பார்த்து நித்தம்
படுத்துறங்கி
இல்லைகளை இருப்பதாய்
நிரப்பிக்கொண்டிருக்கிறான்


பூக்களும் நகையுமாய்
பணக்காரச் சாமிகள்
பலவாய்
விதம் விதமாய்.

கடவுளிடம்
கிழிந்த சட்டையில்லை
கூரையில்லா வீடில்ல
பசியில்லை
காலையில் எழும்பி
படிக்கவும் தேவையில்லையாம்
தானாகவே புத்தி அதிகமாம்
பொன்னையா ஆசிரியர்
சொன்னது ஞாபகம்.


சூரிய விசாரிப்பை விடுத்து
இப்போதெல்லாம்
எனைத் தொட்டு விழும்
பிம்பத்தைக் கூட
விழுங்கத் தொடங்கியிருக்கிறேன்

காட்சிகளை மாற்றிக்கொண்டு
அவர்களும்
அப்படியேதான் இன்றளவும்!!!

வாழ்க்கை இதுதான் என்றானபிறகு
மனம் மரத்துவிடுகிறது
ஏக்கமில்லை
கவலையுமில்லை
அதேநேரம் சந்தோஷமுமில்லை
என்கிறேன்.

பிரார்த்தனைகள் உங்களுக்கு
என்றான பிறகு

அசுரனை அழித்த
இறைவா...

உண்ணத் தமிழ் தா
பண்ணொடு பாக்கள் தா
கொண்ட நன்கல உலகு தா
நாண்டு சாவும் நேர்மை தா
கண்புகும் ரௌத்திரம் தா
விண்ணேகும் வரமும் தா

விதிகளைக் கவிதையாக்க
முயற்சித்துத் தோற்றவன் நான்..!

தீபாவளி நல்வாழ்த்துகள் ...!!


« Last Edit: October 07, 2014, 06:01:19 PM by Maran »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
எதற்கு இந்த தீபாவளி
எங்கே இறந்தான் நரகாசூரன்
சாகவில்லை நரகாசூரர்கள்...

பெண் கொடுத்தால் போதும்
என்று அவன் அவசரத்துக்கு திருமணம்
முடித்து பிறகு அவன் வசதிக்காக பொன் பொருள்
கேட்டு பெண்ணை சித்திரவதை செய்யும்
இடத்தில வாழ்கிறார்கள்  நரகாசூரர்கள்..

பள்ளி படிப்பு என்பதே விளங்காது
பள்ளிகே பயந்து செல்லும்
குழந்தைகளிடம் வக்கிரத்தை
 நடத்தி பிஞ்சிகளின்
 வாழ்க்கையில்நஞ்சை தெளிக்கும்
 இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...

பெண்கள் துணிந்து வந்து சாதிக்க
 துடிக்கும் போதுஅவளை சகதியில்
தள்ளி எள்ளி நகையாடும் அந்த
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...

பெற்ற மகள் என்று தெரிந்தும்
காதலித்தது ஒரு குற்றம் என்று
ஜாதி மதம் காரணம்  காட்டி
கௌரவகொலை செய்யும்
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...

பெண்ணை ஆணின் தேவைக்காக
படைக்க பட்ட ஒரு பொருளாய் பார்க்காமல்
 பெண்ணை பெண்ணாக நடத்தாத வரை
பெண்ணியம் பேனாதவரை
இப்படி பட்ட நரகாசூரர்கள் அழியாதவரை
தீபாவளி ஒரு தெண்ட செலவு தான் ...
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Online MysteRy

      


தீபத் திருநாளாம் தீபாவளி
ஒவ்வொரு தமிழனது வாழ்விலும்
இருள் விலகி
ஒளித் தீபங்கள் சுடர் விடட்டும்

அசுரனை கொன்று
உலகுக்கே விடுதலை தந்த இந்நாளில்
ஒவ்வொரு தமிழனும்
தமிழன் என்று பெருமையுடன் சொல்லி
தலைநிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும்

உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
வானமே கூரையாய்
பூமியே மெத்தையாய்
வாழும் ஏழைகள் வாழ்வில்
வசந்தம் வீசட்டும்

அறியாமை எனும் இருள் அகன்று
அறிவு ஒளி ஒவ்வொருவர் மனதிலும்
தீபங்களாக ஒளி வீசட்டும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்
« Last Edit: October 14, 2014, 11:13:14 AM by MysteRy »

$ Open HearT $

  • Guest
மகிழ்ச்சி புஷ்வானமாய் பொங்க ,
.
கவலைகள் ராகெட்டாய் பறக்க ,
.
இன்ப துன்பம் தரசக்கரமாய் சுழல ,
.
தன்னம்பிக்கை எறியும் பாம்பு வட்டாய் வளர ,
.
வெற்றி அணுகுண்டாய் வெடிக்க ,
.
நம் வாழ்க்கை அனைவர்க்கும் வான்வேடிகையாய்
.
மகிழ்ச்சி அளிக்க ,
.
அனைவரிடம் சரவெடியாய் நட்பாய் பிணைந்து ,
.
இந்த தீபாவளி சிறக்க ,
.
அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ♥♥
.
« Last Edit: October 13, 2014, 11:49:16 AM by $ Open HearT $ »

Offline பூக்குட்டி (PooKuttY)

தமிழர்கள் திருநாளாம்
தீபத் திருநாள் இன்று
இந்தத் திருநாளில்..............

வாழ்க்கை ஒரு ஒருவழிப்பாதை
அதில் திரும்பிப் பார்க்களாமே தவிர
திரும்பிப் போக முடியாது - ஆகவே
நாம் போகும் பாதை
நேரரானதாக  நேர்மையானதாக
பயனுள்ளதாக வாழுவோமே .....

தீபாவளி அன்று பணத்தை கரியாக்கி
சூழலை மாசுபடுத்தும்
பட்டாசுகள் கொளுத்துவதை விட
அந்த பணத்தால்
இல்லாத ஏழைகளுக்கு
ஆடைகள் எடுத்துக் கொடுக்கலாமே .......

பண்டிகை என்றாலே பலகாரம்
தெகிட்ட  தெகிட்ட  இனிப்பு வகைகள்
இவை அனைத்தையும்
இருக்கும் அண்டை அயலாருடன்
பகிர்வதை விட
இல்லாத ஏழைகளுக்கு கொடுத்து
அவர்கள் தீபாவளியை
இனிமையானதாக மாற்றலாம் தானே ......

நம் வீடு முழுக்க
ஒளி விளக்குகளை ஏற்றுவதை விட
இருட்டில் வாழும்
ஒரு ஏழையின் வீட்டில்
ஒரு அகல் விளக்கையேனும் ஏற்றலாம் அல்லவா

தீபாவளி  இனிமையானதாக
பயனுள்ளதாக அமைந்திட வேண்டும்
அனைவருக்கும் எனது
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்  :-*

Offline CybeR

தீபஒளி
பரபரப்பில்
பற்றிக்கொண்ட
விழாக்கால
கடைகளையெல்லாம்
வெள்ளக்காடாய்
மிதக்கவைத்துவிட்டு
வெளியேறி
சொந்த ஊரு
சென்றுவிட்ட
என் தமிழ்
இளைஞர்களைபற்றி
உருமாறிப்போன
வீதிகளும்
பெருமூச்சு விட்டுக்கொண்டே
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை
கொன்றுவிட்ட
இந்நாள்தான்
இவர்களுக்கு
இனியநாளாமென்று...!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)