வா வா நான்சி ,
உன் வரவு நல் வரவாகட்டும்
இறுதியில், உறுதியான ஒரு உண்மையை
உணர்ந்து,உணர்த்திட ஒரு ஜீவனின் வரவு
வருக வருக
வரிகளில் ,நிலையை வடித்து வைத்தாலும் ,
மனதையே ஒன்றாய் மடித்து வைத்தாலும்
வரியினை ஒருவழியாய் படித்து முடித்துவிட்டு
அரைகுறையாய் ஆனாலும், நம் நிலயை விட்டுவிட்டு
வெறும், நம் வரிகளையாவது விமர்சிப்பர்.
நீ சொல் உன்னில் அந்த உறுதி உள்ளதா ?
நல்ல கேள்வி !
என் குருதியை வடித்து மையிட்டு
நான் வடித்த என் வரிகளை படித்து முடித்திடாமல்
என் உறுதியை அறிய வேண்டும் என கருதி கேட்டாயா?
இல்லை,படித்தும் முடித்து , மறதியில் கேட்டாயா?
எதுவாயிருந்தாலும் இதோ என் பதில்
நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள
எதையும் இழப்பேன் ,எதையும் தக்கவைத்துக்கொள்ள
நம்பிக்கையை இழக்கமாட்டேன் என
அறுதியிட்டு உறுதியாய் உறுதி கூறுகிறேன் !