Author Topic: முதியோர் இல்லம்  (Read 424 times)

Offline thamilan

முதியோர் இல்லம்
« on: September 26, 2014, 07:04:13 PM »
பறவைகளுக்கு சிறகு
முளைக்கும் வரை
மிருகங்களுக்கு எழுந்து
நடக்கும் வரை தான்
துணை தேவை
மனிதனுக்கோ
பெரியவனான பின்பும்
பெற்றோர் துணை எதற்கு ............

நாம் பெற்றோரை எதிர்பார்க்கிறோம்
அவர்கள் வயதாகும் வரை
அவரிகள் முதுமை அடைத்து
நடை தளர்ந்ததும்
வேர்களே மரத்துக்கு பாரமாகிப் போவதும்
ஏனோ..................

சின்ன உதவி செய்தவனுக்குக் கூட
ஆயிரம் நன்றி சொல்லும் நாம்
நம்மை பெற்று வளர்த்து
உலகில் ஒரு நல்ல மனிதனாக
வாழ வழிகாட்டிய நம் பெற்றோருக்கு
வாழ்நாள் எல்லாம்
நன்றி சொல்ல வேண்டாமா................

இன்று
நம் பெற்றோருக்கு
நல்ல பிள்ளைகளாக இல்லாத நாம்
நாளை
நம் பிள்ளைகளுக்கு எப்படி
நல்ல பெற்றோர்களாக
இருக்கப் போகிறோம்............

உன்னால்
இன்று உன் பெற்றோகளுக்கு
முதியோர் இல்லம்
நாளை
உன் பிள்ளைகளால்
உனக்கு முதியோர் இல்லம்
இதை மறந்து விடாதே
ஏனெனில்
உன் பிள்ளைகளும்
உன்னை போலத்தானே இருப்பார்கள்