Author Topic: தாவரங்களில் ராணி துளசிச் செடி  (Read 661 times)

Offline Little Heart

தாவரங்களில் ராணியாகக் கருதப்படும் தாவரம் எது என்று தெரியுமா? அது துளசிச் செடி தான்! இந்த துளசிச் செடியை மேலும் இயற்கையின் மருத்துவத் தாய் என்றும் அழைப்பார்கள். அதற்கு காரணம் அது பலவிதமான மருத்துவ குணங்களைத் தன்னுள் உள்ளடக்கியதால் தான். நோய்களைக் குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட நோய்கள் வராமல் இருப்பதற்கும் இந்தச் செடி பாதுகாப்பு அளிக்கின்றது. அப்படி அதனது பூ, பழம், இலை, தண்டு மற்றும் வேர் போன்று அனைத்தையும் நோய்க் கிருமி நாசினியாக, நீரிழிவு நோயைத் தடுக்க, உடல் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மேலும் வலி நிவாரணத்திற்கும் பயன் படுத்தப் படுகிறது. தொடர்ந்து துளசிச் செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் பசையை மென்மையான சருமத்தைப் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது. அதே இலையின் சாறை எடுத்துக் கண்களுள் இட்டால் கண் அழுத்த நோய், கண் புரை நோய் போன்ற கண்களுடன் சம்மந்தப்பட்ட பல நோய்களைக் குணப்படுத்தலாம். சரி இதையும் விடுங்கள், ஆனால் துளசிச் செடி சில விதமான புற்றுநோயைக் கூட தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது என்றால் நம்புவீர்களா?

இப்படித் துளசிச் செடியினால் கிடைக்கும் பயன்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நண்பர்களே, உங்களுக்குத் துளசிச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரியுமா?